பொது செய்தி

தமிழ்நாடு

4 மாவட்டத்துக்கு வெறும் ஆறே போலீசார்! போதை பொருள் கடத்தலை தடுப்பது எப்படி?

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
கோவை: கோவை சரக போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் ஆறு போலீசார் மட்டுமே உள்ளனர். அதிலும் இருவர், நீதிமன்ற பணிக்கு சென்று விடுகின்றனர். இதனால், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க, சென்னை, கோவை உட்பட மொத்தம் 15 போதைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவுகள் செயல்படுகின்றன. கோவை போதைப் பொருள் கடத்தல்
4 மாவட்டத்துக்கு வெறும் ஆறே போலீசார்! போதை பொருள் கடத்தலை தடுப்பது எப்படி?

கோவை: கோவை சரக போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் ஆறு போலீசார் மட்டுமே உள்ளனர். அதிலும் இருவர், நீதிமன்ற பணிக்கு சென்று விடுகின்றனர். இதனால், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க, சென்னை, கோவை உட்பட மொத்தம் 15 போதைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவுகள் செயல்படுகின்றன. கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்கள் உள்ளன.இப்பிரிவில், டி.எஸ்.பி., பணியிடம் எட்டு மாதங்களாக காலியாக உள்ளது.


latest tamil news


ஒரு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட ஆறு போலீசார் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். இதில் இருவர், நீதிமன்ற பணிகளை பார்த்து வருகின்றனர். மற்ற நான்கு பேர் தான் நான்கு மாவட்டங்களை கண்காணிக்க வேண்டியுள்ளது. இச்சூழலில், மாநிலம் முழுதும் இப்பிரிவுக்கு 46 போலீசார் புதிதாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேர் கோவை சரகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து பணியில் சேர உள்ளனர். ஆனால், இந்த அளவு போலீசாரை வைத்தும், கடத்தலை தடுப்பது எளிதான காரியமில்லை.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையிலேயே இப்போது வரை இப்பிரிவில் போலீசார் பணியில் உள்ளனர். கோவையில் இருந்து திருப்பூர் மாவட்டம் பிரிந்து 12 ஆண்டுகளுக்கு மேலாகிறது.இதேபோன்று, மாநிலம் முழுதும் புதிய மாவட்டங்கள் உருவாகி உள்ளதால், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
30-செப்-202110:31:36 IST Report Abuse
elakkumanan இவங்களை யாரு தடுக்க சொன்னது? அதுக்காக இவர்கள் நியமிக்கப்படவில்லை என்பது, இவர்களுக்கு நல்லா தெரியும்... இவர்களால் அது முடியாது என்று உறுதி செய்தபின்பே, இவர்களுக்கு அந்த வேலை வழங்கப்பட்டுள்ளது.. எனவே, சும்மானாச்சுக்கும், அங்கேயும் இங்கயும் போக்கு காட்டுவாங்க.. பிடிக்காத ஆட்கள், எதிர்க்கட்சி ஆட்கள் மீது வழக்கு போட மட்டும்தான் இந்த பிரிவு பயன்படுத்தபடும்.. போதையை ஒழிக்கணும்னா, ஒட்டு போய்டுமே... ஏனெனில், அதில் ஈடுபடுவோர் பெரும்பாலும் வரிகொடா, பெயரில்லா , மோடி ஒழிக கோஷ்டிகள்...இப்போ புரியுதா யாருக்கு ஒட்டு மற்றும் வருமான இழப்பு ன்னு...சும்மா, இதெல்லாம் ஒரு செய்தி ன்னு நம்ம ஊடக கூட்டணிக்கு தரும் போனஸ்...ஊடக கூட்டுத்தானே இன்று பெரிய அளவில் இந்த அரசை முட்டு கொடுக்கிறது..எஸ் ஐ சேரில் அமர்வதெல்லாம் செய்தியாக்குறது என்றால் சும்மாவா.. சொல் மற்றும் விளம்பர அரசு....காலம் மக்களுக்கு புரிய வைக்கும்...
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-செப்-202110:23:07 IST Report Abuse
Lion Drsekar வகிக்கும் பதவிக்கு தேவையான அதிகாரத்தைக் கொடுத்தால் ஒரே ஒரு காவலர் போதும் , இங்குதான் மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு ஊழியர்களை மற்றும் பிரநிதிகளை உயர்த்துவது மரபாக இருக்க என்ன செய்ய முடியும், ஒரு வீட்டுக்கு ஒரு காவலரை வைத்தாலும் நடப்பது நடந்துகொண்டுதான் இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
30-செப்-202110:17:12 IST Report Abuse
சங்கிமக்கா எல்லாரும் அமைச்சர்களின் பாதுகாப்புக்காக போய்ட்டாங்க போல..கடத்தல் பண்ணுரவங்க தான் யார் ஆளுங்க னு தேரியுமே.. புடிச்சாலும்.... நமக்கு ஏண்டா இந்த ஊர் வம்பு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X