சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பலரிடம் ரூ.50 லட்சம் கடன் வாங்கிய வியாபாரி மாயம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், சூரமங்கலம், மிட்லன்ட் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 51. இவர், சோனா தொழில்நுட்ப கல்லூரி எதிரே, ஏ.என்.எஸ்., ஏஜன்ஸி பெயரில், பல்பொருள் அங்காடி நடத்தினார். தொழில் நடத்த, உறவினர், நண்பர் என, 20க்கும் மேற்பட்டோரிடம், 50 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றார். திருப்பி செலுத்தாததால், கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுத்தனர். இந்நிலையில், கடந்த, 27 மதியம், 1:00 மணிக்கு வீட்டில் இருந்து

சேலம்: சேலம், சூரமங்கலம், மிட்லன்ட் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 51. இவர், சோனா தொழில்நுட்ப கல்லூரி எதிரே, ஏ.என்.எஸ்., ஏஜன்ஸி பெயரில், பல்பொருள் அங்காடி நடத்தினார். தொழில் நடத்த, உறவினர், நண்பர் என, 20க்கும் மேற்பட்டோரிடம், 50 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றார். திருப்பி செலுத்தாததால், கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுத்தனர். இந்நிலையில், கடந்த, 27 மதியம், 1:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜேந்திரன் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது மகன் அஷ்வின் கார்த்திக், 19, நேற்று முன்தினம் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். ராஜேந்திரனுக்கு கடன் கொடுத்தவர்கள் யாரேனும் கடத்தினரா, கடன் கொடுத்தவர்களை ஏமாற்ற மாயமானது போல் நடிக்கிறாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X