பொது செய்தி

தமிழ்நாடு

வரும்முன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்: கடவுள் வாழ்த்து, தேசிய கீதம் இல்லாமல் முடிந்த விழா

Added : செப் 30, 2021
Share
Advertisement
வாழப்பாடி: வாழப்பாடியில், முதல்வர் ஸ்டாலின், வரும்முன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆனால், அந்த விழாவில், கடவுள் வாழ்த்து, தேசிய கீதம் பாடப்படவுமில்லை; ஒலிக்கவுமில்லை.சேலம், தர்மபுரி மாவட்ட, இருநாள் அரசு முறை பயணமாக, முதல்வர் ஸ்டாலின், நேற்று விமானம் மூலம், சேலம் வந்தார். பின்னர் வாழப்பாடியில் நடந்த வரும்முன் காப்போம் திட்ட தொடக்கவிழாவில் பங்கேற்றார்.

வாழப்பாடி: வாழப்பாடியில், முதல்வர் ஸ்டாலின், வரும்முன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆனால், அந்த விழாவில், கடவுள் வாழ்த்து, தேசிய கீதம் பாடப்படவுமில்லை; ஒலிக்கவுமில்லை.


சேலம், தர்மபுரி மாவட்ட, இருநாள் அரசு முறை பயணமாக, முதல்வர் ஸ்டாலின், நேற்று விமானம் மூலம், சேலம் வந்தார். பின்னர் வாழப்பாடியில் நடந்த வரும்முன் காப்போம் திட்ட தொடக்கவிழாவில் பங்கேற்றார். விழாவில் அமைச்சர் சுப்ரமணியன் வரவேற்று, பின் பேசியதாவது: சாதாரண மக்களும் நோய் நொடியின்றி வாழ, 1996 டிசம்பரில் கருணாநிதி தொடங்கி வைத்த வரும்முன் காப்போம் திட்டம், கடந்த ஆட்சியில், 10 ஆண்டாக முடங்கிவிட்டது. அத்திட்டத்தை, மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில், 385 தாலுகாவில், தலா மூன்று முகாம் வீதம், 1,155, சென்னை தவிர்த்து, 20 மாநகராட்சிகளில், தலா, 4 முகாம் வீதம், 80 முகாம், சென்னை பெரு மாநகராட்சியில், 15 மண்டலங்களில், 15 முகாம் என, 1,250 முகாம் ஓராண்டில் நடத்தப்படும். முகாமில், பொது மருத்துவம், இருதயம், கண், காது, மூக்கு என, 17 பிரிவு மருத்துவர் அடங்கிய குழுவால், பன்முக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். தேவைப்பட்டால், நோயாளிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை தொடரும். நாள்பட்ட வியாதிகள் கண்டறியப்பட்டால், அவர்கள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, மருத்துவ உதவி பெறலாம். இதுவரை, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், 12.50 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், 'கருணாநிதி வரும்முன் காப்போம்' திட்டத்தை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கூட்டுறவு உள்பட, 6 துறைகள் சார்பில், 24.73 கோடி ரூபாய் மதிப்பில் நல உதவிகளை, 2,530 பயனாளிகள் பெற்றுக்கொண்டனர். ஆனால், கடவுள் வாழ்த்து பாடாமல் விழாவை தொடங்கி, தேசிய கீதம் இசைக்காமல் நிகழ்ச்சி முடிந்தது. நலத்திட்ட உதவி வழங்கிய முதல்வர் ஸ்டாலின் ஒருவார்த்தை கூட பேசாமல் கிளம்பினார். அமைச்சர் அன்பரசன், எம்.பி.,க்கள் கவுதம சிகாமணி, பார்த்திபன், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பாளர்கள் செல்வகணபதி, சிவலிங்கம், வீரபாண்டி முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X