தமிழ்நாடு

ஜவ்வரிசி உற்பத்தியில் சர்வதேச அளவில் சேலத்தை முதலிடமாக மாற்ற நடவடிக்கை:முதல்வர் ஸ்டாலின்

Added : செப் 30, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ''ஜவ்வரிசி உற்பத்தியில், இந்திய அளவில் முதலிடத்தில் உள்ள சேலம் மாவட்டத்தை, சர்வதேச அளவில் முதலிடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சேலம் மாவட்டம், ஆத்தூரில், நவீன வசதிகளுடன் கூடிய தனியார் சேகோ ஆலையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். தொடர்ந்து, 1.60 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட்ட மின்னணு ஏல மையம், நேரடி

ஆத்தூர்: ''ஜவ்வரிசி உற்பத்தியில், இந்திய அளவில் முதலிடத்தில் உள்ள சேலம் மாவட்டத்தை, சர்வதேச அளவில் முதலிடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


சேலம் மாவட்டம், ஆத்தூரில், நவீன வசதிகளுடன் கூடிய தனியார் சேகோ ஆலையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். தொடர்ந்து, 1.60 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட்ட மின்னணு ஏல மையம், நேரடி விற்பனை முனைய கட்டடத்தை திறந்து வைத்தார். பின், மரவள்ளி விவசாயிகள், சேகோ ஆலை உரிமையாளர்களுடன் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதபடி, வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, பல தரப்பினரை, மாவட்டந்தோறும் சென்று ஆலோசித்த பின், இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தியாளர் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும். ஜவ்வரிசி சேமிப்பு கிடங்கு அமைத்தல், ஜவ்வரிசியை உணவு பொருளாக பயன்படுத்துவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஜவ்வரிசி உற்பத்தியில் கலப்படத்தை தடுக்க, குழு அமைத்துள்ளதோடு, ஜவ்வரிசி, மரவள்ளிக்கு நியாய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜவ்வரிசி உற்பத்தியில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ள, சேலம் மாவட்டத்தை, சர்வதேச அளவில் முதலிடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க., ஆட்சிக்கு வந்த நான்கு மாதத்தில், தொழில் துறையில் தமிழகம் புத்துணர்வு பெற்றுள்ளது. தெற்கு ஆசிய அளவில் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிடும்படி, தொழில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. புது தொழில்களை ஈர்க்க, உட்கட்டமைப்புகளை மேம்படுத்த, 17 ஆயிரத்து, 149 கோடி ரூபாயில், 35 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம், 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அளவில் தொழில் வளர்ச்சியில் தமிழகம் மூன்றாவது மாநிலமாக உள்ளது. தமிழகத்தை முதல் மாநிலமாக கொண்டு செல்லும்படி ஏற்றுமதி கொள்கை அமைக்கப்படும். திருப்பூர், மதுரை, கோவை உள்பட, 10 ஏற்றுமதி மையங்கள் மேம்படுத்தப்படும். நகர், கிராமம், பெரு, சிறு தொழில் வேறுபாடின்றி தொழில் கொள்கை வடிவமைக்க, தொழிலதிபர்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஊரக தொழிற்துறை அமைச்சர் அன்பரசன் பேசியதாவது: சேலம், நாமக்கல் உள்பட, 11 மாவட்டங்களில், 1.85 ஆயிரம் ஏக்கரில், 72 ஆயிரம் விவசாயிகள் மரவள்ளி சாகுபடி செய்கின்றனர். இத்தொழிலில், 10 லட்சம் பேர் உள்ளனர். ஜவ்வரிசி தர பரிசோதனை செய்ய அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. கலப்படத்தை தவிர்க்க, மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்துள்ளோம். 3 லட்சம் ஏக்கரில் மரவள்ளி சாகுபடி செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் குடோனில் ஜவ்வரிசி வைக்க, ஆண்டுக்கு, 1 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. 40 கோடி ரூபாயில் கிடங்கு உள்ளிட்ட திட்டங்களுக்கு, 85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பத்திரிகையாளர், போலீசார் வாக்குவாதம்: ஆத்தூர் தனியார் சேகோ ஆலையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது, பத்திரிகை நிருபர்கள், கேமராமேன்களை ஓரு இடத்தில் நிறுத்தி வைத்தனர். முதல்வர் ஆய்வு செய்யும் இடங்களில் அனுமதிக்கவில்லை. கருத்து கேட்பு கூட்டத்துக்கு வந்த முதல்வரை புகைப்படம், வீடியோ எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனுமதிக்கவில்லை. ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர்களை தள்ளிவிட்டு, வாக்குவாதம் செய்தனர். பதிலுக்கு, பத்திரிகையாளர்களும், போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X