முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

Added : செப் 30, 2021
Share
தர்மபுரி: தர்மபுரிக்கு நேற்றிரவு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.தர்மபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை கூடுதல் கட்டடத்தை இன்று காலை, 9:30 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும், 100 சதவீத தடுப்பூசி செலுத்திய பஞ்.,

தர்மபுரி: தர்மபுரிக்கு நேற்றிரவு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தர்மபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை கூடுதல் கட்டடத்தை இன்று காலை, 9:30 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும், 100 சதவீத தடுப்பூசி செலுத்திய பஞ்., நிர்வாகத்தினர், செவிலியர்களுக்கு விருது வழங்குகிறார். கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்குகிறார். தொடர்ந்து ஒகேனக்கல்லில் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொள்கிறார். மாலை, 4:30 மணிக்கு வத்தல்மலைக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு பழங்குடியினருக்கு நலத்திட்டங்களை வழங்குகிறார். அங்கு அனைத்து துறை அலுவலர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நேற்றிரவு தர்மபுரி வந்த முதல்வர் ஸ்டாலினை, மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, எஸ்.பி., கலைச்செல்வன் வரவேற்றனர். பாளையம் டோல்கேட் அருகே தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில், தி.மு.க.,வினர் வரவேற்றனர். தர்மபுரி மாவட்டத்தில் இன்று நடக்கும், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதையொட்டி, முன்னேற்பாடு பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். பல்வேறு துறைசார்ந்த அலுவலர்கள் முன்னேற்பாடு பணிகளையும், போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X