லஞ்ச ஒழிப்பு சோதனையில் காழ்ப்புணர்ச்சி இல்லை; அழகிரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்பு சோதனையில் காழ்ப்புணர்ச்சி இல்லை; அழகிரி

Added : செப் 30, 2021
Share
சோளிங்கர்: ''அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை,'' என, காங்., மாநில தலைவர் அழகிரி கூறினார்.ஊரக உள்ளாட்சி தேர்தல் நடப்பதையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் காங்., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மக்கள் தவறாக, தி.மு.க.,வுக்கு ஓட்டு

சோளிங்கர்: ''அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை,'' என, காங்., மாநில தலைவர் அழகிரி கூறினார்.


ஊரக உள்ளாட்சி தேர்தல் நடப்பதையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் காங்., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மக்கள் தவறாக, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டதாக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். அவர் சர்வாதிகார கட்சியின் மாநில பிரதிநிதி. அவருக்கு அப்படி தான் தோன்றும். மக்கள் சரியாக வாக்களித்துள்ளனர். நீட் தேர்வுக்காக ராஜன் குழு அமைக்கப்பட்டது. சட்டசபையில் நீட் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றியது. நிச்சயம் அந்த தீர்மானம் வெற்றி பெறும். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை என்ற குற்றச்சாட்டு வந்தது. புகார்கள் மீது போலீசார் விசாரிக்கின்றனர். குற்றமற்றவர்கள் என நிருபிக்க வேண்டியது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தான். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X