தகுதியானவர்களை தேர்வு செய்ய கடிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தகுதியானவர்களை தேர்வு செய்ய கடிதம்

Added : செப் 30, 2021
Share
கோபி: கோபி நகராட்சி, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அனைவருக்கும் வீடு வசதி திட்ட சிறப்பு முகாம், கோபியில் சமீபத்தில் நடந்தது. கோபி அருகே அளுக்குளியில், 228 குடியிருப்பு, அரக்கன்கோட்டையில், 180 குடியிருப்புக்கு விருப்பமுள்ளவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. இரு நாட்கள் நடந்த முகாமில், 527 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களில் தகுதியானவர்களை

கோபி: கோபி நகராட்சி, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அனைவருக்கும் வீடு வசதி திட்ட சிறப்பு முகாம், கோபியில் சமீபத்தில் நடந்தது. கோபி அருகே அளுக்குளியில், 228 குடியிருப்பு, அரக்கன்கோட்டையில், 180 குடியிருப்புக்கு விருப்பமுள்ளவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. இரு நாட்கள் நடந்த முகாமில், 527 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களில் தகுதியானவர்களை ஆய்வு செய்ய, நகராட்சி கமிஷனர் பிரேம் ஆனந்த் மூலம், கோபி தாசில்தாருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினரின் ஆய்வுக்கு பின், தகுதியானவர்கள் இறுதி செய்யப்படுவர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X