பொது செய்தி

தமிழ்நாடு

வாரிசு அடிப்படையில் பணி ஆணை வழங்கல்

Added : செப் 30, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்ட மின்வாரியத்தில், ஏழு வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணையை, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். மின்வாரியத்தில் பணி செய்து, பணியின்போது இறந்த கோபி மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட ஆறு பேர், ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட ஒருவர் என, ஏழு பேரின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

ஈரோடு: ஈரோடு மாவட்ட மின்வாரியத்தில், ஏழு வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணையை, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். மின்வாரியத்தில் பணி செய்து, பணியின்போது இறந்த கோபி மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட ஆறு பேர், ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட ஒருவர் என, ஏழு பேரின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் அமைச்சர் முத்துசாமி, ஏழு பேருக்குமான பணி நியமன ஆணையை வழங்கினார். மின்வாரிய தலைமை பொறியாளர் முரளிதரன், மேற்பார்வை பொறியாளர்கள் ஈரோடு இந்திராணி, கோபி நேரு ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X