பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் பெற்றோரை இழந்த 18 குழந்தைகளுக்கு நிவாரண நிதி

Added : செப் 30, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கொரோனாவால் பெற்றோரை இழந்த, 18 குழந்தைகளுக்கு முதல்வரின் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.இதுபற்றி, ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரி பிரியாதேவி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்ததாக, முதல்வரின் நிவாரண நிதிக்காக, 338 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு பணியில் இருந்தவர்கள், வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கொரோனாவால் பெற்றோரை இழந்த, 18 குழந்தைகளுக்கு முதல்வரின் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.


இதுபற்றி, ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரி பிரியாதேவி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்ததாக, முதல்வரின் நிவாரண நிதிக்காக, 338 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு பணியில் இருந்தவர்கள், வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உட்பட பிற காரணத்தால், பத்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள, 328 விண்ணப்பங்களில் கடந்த ஜூலை மாதம் தாய், தந்தையர் என இருவரையும் இழந்த நால்வருக்கு தலா, 5 லட்சம் ரூபாய் வீதம், 20 லட்சம் ரூபாய் அவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. நடப்பு மாதம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த, 14 பேருக்கு தலா, 3 லட்சம் ரூபாய் வீதம், 42 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, 18 பேருக்கு, 62 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 200 விண்ணப்பங்கள் ஆவண சரிப்பு பணி முடிந்து, நிவாரண நிதிக்கு தகுதியானவர்கள் என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 118 பேரின் விண்ணப்பங்கள் ஆவண சரி பார்ப்பு பணி நடந்து வருகிறது. இதற்கான வழிமுறைகளை அறிய, ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள ஜவான் பவான் அலுவலகம், இரண்டாம் தளத்தில் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை வேலை நாட்களில் அணுகலாம். அல்லது, 1098 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X