பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சியில் வரி வசூல் ஆலோசனை கூட்டம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
ஈரோடு: வரி வசூலை தீவிரப்படுத்த வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. ஈரோடு மாநகராட்சியில், ஆண்டுக்கு சொத்து வரி, 29 கோடியே, 84 லட்சம் ரூபாய், தொழில்வரி, நான்கு கோடியே, 95 லட்சம் ரூபாய், மேலும் குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, குப்பை வரி, குத்தகை இனங்கள் என மொத்தம், 52 கோடியே, 48 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்., முதல் மார்ச்

ஈரோடு: வரி வசூலை தீவிரப்படுத்த வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. ஈரோடு மாநகராட்சியில், ஆண்டுக்கு சொத்து வரி, 29 கோடியே, 84 லட்சம் ரூபாய், தொழில்வரி, நான்கு கோடியே, 95 லட்சம் ரூபாய், மேலும் குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, குப்பை வரி, குத்தகை இனங்கள் என மொத்தம், 52 கோடியே, 48 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்., முதல் மார்ச் கால கணக்கின் படி வரி வசூல் செய்யப்படுகிறது. இதில் வரி நிலுவை வைத்துள்ளவர்களிடம் வரி வசூல் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் கமிஷனர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. மண்டல உதவி கமிஷனர்கள், விஜயகுமார், விஜயா, சண்முக வடிவு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது: மாநகரை பொருத்தவரை, 85 முதல் 95 சதவீதம் வரை வரி வசூலாகி விடுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவலால், பாதுகாப்பு பணியில் இருந்ததால் வரி வசூலில் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்த காரணத்தால், வரி வசூல் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X