பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் நலத்துறை கூட்டம்: தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், அமைப்பு சாரா தொழிலாளர் விபரங்களை சேகரிக்கும் 'ஞு-குஏகீஅM' போர்ட்டல் உருவாக்குதல், பதிவு செய்ய கோருதல் தொடர்பான அனைத்து தொழிற்சங்க கூட்டம் நடந்தது. தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) பாலதண்டாயுதம், உதவி ஆணையர் (சமரசம்) முருகேசன், உதவி ஆணையர் காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி., மாநில தலைவர் சின்னசாமி

ஈரோடு: ஈரோடு தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், அமைப்பு சாரா தொழிலாளர் விபரங்களை சேகரிக்கும் 'ஞு-குஏகீஅM' போர்ட்டல் உருவாக்குதல், பதிவு செய்ய கோருதல் தொடர்பான அனைத்து தொழிற்சங்க கூட்டம் நடந்தது. தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) பாலதண்டாயுதம், உதவி ஆணையர் (சமரசம்) முருகேசன், உதவி ஆணையர் காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி., மாநில தலைவர் சின்னசாமி தலைமையில், மனு வழங்கி இப்பதிவுமுறையை நிறுத்தி வைக்கக்கோரினர். அவர்களது மனுவில் கூறியிருப்பதாவது: இந்த போர்ட்டலில் வரும் டிச., 31க்குள், இந்தியா முழுவதும் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களை பதிவு செய்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதை அமல்படுத்த மாநில, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைப்பதாக கூறியுள்ளனர். மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சரை இக்குழுவில் இணைக்காமல், மாநில அரசை புறக்கணித்துவிட்டு மாவட்டங்களில் செயல்படுத்த முயற்சிப்பது தவறான முடிவாகும். மாநில அரசு, 17 நலவாரியங்களை செயல்படுத்தி வருகிறது. இதை தவிர்த்து, மத்திய அரசு நேரடி பதிவை மேற்கொள்வது குறைபாடுகளை ஏற்படுத்தும். அதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளதால், இதனை ஏற்க இயலாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில், இப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X