ஈரோடுக்கு வரத்தான 2,000 டன் நெல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடுக்கு வரத்தான 2,000 டன் நெல்

Added : செப் 30, 2021
Share
ஈரோடு: தஞ்சை மாவட்டத்தில் இருந்து ரயில் மூலம் நேற்று, 42 பெட்டிகளில், 2,000 டன் நெல் ஈரோடு கூட்ஸ் ஷெட் வந்தது. இவை சுமை தொழிலாளர்கள் மூலம், லாரிகளில் ஏற்றப்பட்டு பொது வினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசு ஏலம் விட்டவுடன் தனியார் அரிசி ஆலைகள், நெல்லை அரவைக்கு எடுத்து சென்று அரிசியாக்கி மீண்டும் அரசிடம் வழங்குவர். பின்னர் இதை, அரசு பொது வினியோக திட்டத்தின்

ஈரோடு: தஞ்சை மாவட்டத்தில் இருந்து ரயில் மூலம் நேற்று, 42 பெட்டிகளில், 2,000 டன் நெல் ஈரோடு கூட்ஸ் ஷெட் வந்தது. இவை சுமை தொழிலாளர்கள் மூலம், லாரிகளில் ஏற்றப்பட்டு பொது வினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசு ஏலம் விட்டவுடன் தனியார் அரிசி ஆலைகள், நெல்லை அரவைக்கு எடுத்து சென்று அரிசியாக்கி மீண்டும் அரசிடம் வழங்குவர். பின்னர் இதை, அரசு பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X