சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சந்தன மரம் கடத்த முயன்ற இருவர் கைது

Added : செப் 30, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா அறிவுறுத்தலின்படி, ஆசனூர் வனச்சரகர் சிவக்குமார் தலைமையில், வனத்துறையினர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தன மரம் வெட்டி கொண்டிருந்த இருவரை பிடித்தனர். விசாரித்ததில் பங்களாதொட்டி கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி, 24, சிவகுமார், 28, என்பதும் இருவரும் வனப்பகுதியில் இருந்து சந்தன மரம் வெட்டி கடத்த

புன்செய்புளியம்பட்டி: ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா அறிவுறுத்தலின்படி, ஆசனூர் வனச்சரகர் சிவக்குமார் தலைமையில், வனத்துறையினர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தன மரம் வெட்டி கொண்டிருந்த இருவரை பிடித்தனர். விசாரித்ததில் பங்களாதொட்டி கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி, 24, சிவகுமார், 28, என்பதும் இருவரும் வனப்பகுதியில் இருந்து சந்தன மரம் வெட்டி கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த, இரண்டு சந்தன மரத்துண்டுகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மாவட்ட வன அலுவலர் அறிவுரைபடி, சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X