தூர் எடுத்த மண், கழிவு அகற்ற மக்கள் கோரிக்கை

Added : செப் 30, 2021
Share
Advertisement
ஈரோடு: சாக்கடையில் இருந்து தூர் எடுத்த மண், கழிவுகள் மீண்டும் சாக்கடைக்கே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி, 60 வார்டுகளிலும் மெகா தூய்மை திட்டம் துவங்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சாக்கடை, மழை நீர் வடிகால்கள் தூர் எடுக்கப்பட்டதாக மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் பிரகாஷ் கூறினார். தூர் எடுத்தது சரி தான்; அதே சமயம் பல இடங்களில் தூர் எடுத்த மண், கழிவுகளை எடுத்து

ஈரோடு: சாக்கடையில் இருந்து தூர் எடுத்த மண், கழிவுகள் மீண்டும் சாக்கடைக்கே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி, 60 வார்டுகளிலும் மெகா தூய்மை திட்டம் துவங்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சாக்கடை, மழை நீர் வடிகால்கள் தூர் எடுக்கப்பட்டதாக மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் பிரகாஷ் கூறினார். தூர் எடுத்தது சரி தான்; அதே சமயம் பல இடங்களில் தூர் எடுத்த மண், கழிவுகளை எடுத்து செல்லவில்லை. சாக்கடை அருகிலேயே கொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட, மூலப்பாளையம் பாரதி நகர் பகுதிகளில், 20 நாட்களுக்கு மேலாக தூர் எடுத்த மண் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் தூர் எடுத்த மண், மீண்டும் சாக்கடைக்குள்ளேயே சரிந்து விழும் அவலம் ஏற்பட்டுள்ளது. காற்று அடிக்கும் போது, கழிவுகள் பறக்கின்றன. இப்பகுதிகளை ஆய்வு செய்து, தூர் எடுத்த மண் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X