பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் கட்டண பாக்கி ரூ.219 கோடி: கோவை மாநகராட்சியால் வாரியங்களுக்குள் 'வார்'

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021
Share
Advertisement
கோவை: கோவை மாநகராட்சி செலுத்த வேண்டிய, 219 கோடி ரூபாய் குடிநீர் கட்டணத்தைச் செலுத்தாததால், மின் கட்டணம் செலுத்தாமல் குடிநீர் வடிகால் வாரியம் தவிக்கிறது. இதனால், புதிய மின் இணைப்பை வழங்க மின் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.கோவை மாநகராட்சியில் உள்ள, 100 வார்டுகளுக்கு, பில்லுார் அணை, சிறுவாணி அணையிலிருந்து எடுக்கப்படும் குடிநீர் தான் பெருமளவில் வினியோகிக்கப்படுகிறது.
குடிநீர் கட்டணம், பாக்கி, கோவை மாநகராட்சி, வாரியங்கள், வார்

கோவை: கோவை மாநகராட்சி செலுத்த வேண்டிய, 219 கோடி ரூபாய் குடிநீர் கட்டணத்தைச் செலுத்தாததால், மின் கட்டணம் செலுத்தாமல் குடிநீர் வடிகால் வாரியம் தவிக்கிறது. இதனால், புதிய மின் இணைப்பை வழங்க மின் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கோவை மாநகராட்சியில் உள்ள, 100 வார்டுகளுக்கு, பில்லுார் அணை, சிறுவாணி அணையிலிருந்து எடுக்கப்படும் குடிநீர் தான் பெருமளவில் வினியோகிக்கப்படுகிறது. இந்த அணைகளில் இருந்து தண்ணீரை பம்ப் செய்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு அனுப்பும் பணியை குடிநீர் வடிகால் வாரியம் செய்கிறது.பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் குடிநீர் கட்டணத்தில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கட்டணத்தை கோவை மாநகராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டும். ஆனால், அரைகுறையாகவே இந்தத் தொகையை மாநகராட்சி செலுத்தி வருவதால், ஒவ்வொரு ஆண்டும் பாக்கி உயர்ந்து, இப்போது பல நுாறு கோடிகளைத் தாண்டியுள்ளது.


சிறுவாணிக்கு 'ராயல்டி'



இதுதொடர்பான பல்வேறு தகவல்களை, சமச்சீர் வளர்ச்சிக்கான கூட்டமைப்பின் தலைவர் வக்கீல் லோகநாதன் வாங்கியுள்ளார். சிறுவாணி அணை, கேரளாவில் இருப்பதால், அங்கிருந்து பெறப்படும் தண்ணீருக்கு தமிழக அரசு ராயல்டி செலுத்த வேண்டியுள்ளது என்பது இதில் முக்கியமான தகவல். ஒவ்வொரு ஆண்டும் அணையில் இருக்கும் தண்ணீரைக் கணக்கிட்டு, இந்த ராயல்டி வசூலிக்கப்படுவதால், ஆண்டுக்கு ஆண்டு இந்தத் தொகை மாறுபடுகிறது. உதாரணமாக, 2010-2011ம் நிதியாண்டில், ஒரு கோடியே, 82 லட்சத்து, 89 ஆயிரத்து, 940 ரூபாயாக இருந்த ராயல்டி, அடுத்த ஆண்டிலேயே ஏழு கோடியே, 11 லட்சத்து, 58 ஆயிரத்து, 824 ரூபாயாக உயர்ந்துள்ளது.கடந்த பத்தாண்டுகளில் கேரள அரசுக்கு சிறுவாணி தண்ணீருக்கான ராயல்டியாக 43 கோடியே 35 லட்சத்து 21 ஆயிரத்து 962 ரூபாயை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செலுத்தியுள்ளது.


latest tamil news


சிறுவாணி அணையிலிருந்து தண்ணீரை எடுப்பதற்கான மின் கட்டணம், பராமரிப்பு ஊழியர் ஊதியம், ஒப்பந்தப்பணிகள், தளவாடங்கள், பழுது நீக்கம், காப்புரிமை, வாகன செலவினம் என எல்லாவற்றையும் குடிநீர் வடிகால் வாரியம் தான் செலவிட்டு வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் செலவிட்ட தொகை, 29 கோடியே, 8 லட்சத்து, 28 ஆயிரத்து, 594 ரூபாய்.


மின் இணைப்பு தர மறுப்பு


கடந்த 2007ம் ஆண்டில், சிறுவாணி நீருக்காக 83.87 கோடி, பில்லுார் குடிநீர்த் திட்டத்துக்கு 31.18 கோடி என மொத்தம் 115 கோடி கேட்டு, அப்போதைய மாநகராட்சி கமிஷனருக்கு குடிநீர் வடிகால் வாரிய சிறுவாணி பராமரிப்புக் கோட்ட நிர்வாகப் பொறியாளர் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், மாநகராட்சி சார்பில் பாதித்தொகை மட்டுமே, தொடர்ந்து செலுத்தப்பட்டு வந்துள்ளது. இதனால், ஆண்டுதோறும் இந்தத் தொகை உயர்ந்து, இப்போது சிறுவாணி குடிநீருக்கான கட்டண பாக்கி மட்டும் 219 கோடியே 9 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை 26ல், இத்தொகையைச் செலுத்துமாறு மாநகராட்சி கமிஷனருக்கு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 'மாநகராட்சி செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், குடிநீர் வடிகால் வாரியத்துக்கு வராத காரணத்தால், மின் வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. புதிய மின் இணைப்புக் கேட்டால், மின் பகிர்மானக் கழகம் தர மறுக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவை நகரில், 24 X 7 குடிநீர்த் திட்டம், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பாக்கித் தொகை, குடிநீர் வடிகால் வாரியத்துக்குக் கிடைக்குமா? என்பதும் சந்தேகமாகவே உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X