அரசு பெண் ஊழியரை கீழே தள்ளி கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பெண் ஊழியரை கீழே தள்ளி கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு

Added : செப் 30, 2021
Share
ஈரோடு: ஈரோட்டில் அரசு ஊழியரை கீழே தள்ளி, கத்தியை காட்டி மிரட்டி, 10.5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.ஈரோடு, மூலப்பாளையம் ரைஸ்மில் ரோட்டை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் மனைவி உமா மகேஸ்வரி, 45, கலெக்டர் அலுவலகத்தில் கலால் வரித்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில், வருவாய் ஆய்வாளராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மாலை பணி முடித்து ஸ்கூட்டியில், 6:30 மணியளவில் வீடு நோக்கி

ஈரோடு: ஈரோட்டில் அரசு ஊழியரை கீழே தள்ளி, கத்தியை காட்டி மிரட்டி, 10.5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
ஈரோடு, மூலப்பாளையம் ரைஸ்மில் ரோட்டை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் மனைவி உமா மகேஸ்வரி, 45, கலெக்டர் அலுவலகத்தில் கலால் வரித்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில், வருவாய் ஆய்வாளராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மாலை பணி முடித்து ஸ்கூட்டியில், 6:30 மணியளவில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே, சிவனேசன் காலனியை கடக்க முற்பட்ட போது பைக்கில் பின்னால் வந்த நபர், ஸ்கூட்டியில் லேசாக மோதி உமா மகேஸ்வரியை கீழே விழ செய்தார். அப்போது பைக்கின் பின்னால் இருந்த நபர், கீழே இறங்கி சென்று கத்தியை காட்டி மிரட்டி உமா மகேஸ்வரி கழுத்தில் இருந்த தாலிக்கொடி, செயின், மோதிரம், தோடு என, 10.5 பவுன் நகையை பறித்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து பைக்கில் தப்பி தலைமறைவாகினர். பைக்கில் வந்த இருவருக்கும், 25 வயது இருக்கும். பைக் ஓட்டிய நபர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். அங்கிருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X