ரூ.2.27 கோடிக்கு கொப்பரை ஏலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2.27 கோடிக்கு கொப்பரை ஏலம்

Added : செப் 30, 2021
Share
பெருந்துறை: ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், இரண்டு கோடியே, 27 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் நடந்தது. பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 4,661 மூட்டைகளில் இரண்டு லட்சத்து, 28 ஆயிரம் கிலோ கொப்பரையை நேற்று விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, 96.99 ரூபாய்,

பெருந்துறை: ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், இரண்டு கோடியே, 27 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் நடந்தது. பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 4,661 மூட்டைகளில் இரண்டு லட்சத்து, 28 ஆயிரம் கிலோ கொப்பரையை நேற்று விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, 96.99 ரூபாய், அதிகபட்சமாக, 106.01 ரூபாய்க்கு விற்பனையாயின. இரண்டாம் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக, 20.50 ரூபாய், அதிகபட்சமாக, 99 ரூபாய்க்கு விற்பனையாயின. மொத்தம் இரண்டு கோடியே, 27 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X