பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் அணை கரையில் முகாமிட்டுள்ள யானை கூட்டம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள கரையில், யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியை ஒட்டி பவானிசாகர், விளாமுண்டி வனப்பகுதி அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை கூட்டம் அணையின் நீர்த்தேக்க பகுதியை ஒட்டி

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள கரையில், யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியை ஒட்டி பவானிசாகர், விளாமுண்டி வனப்பகுதி அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை கூட்டம் அணையின் நீர்த்தேக்க பகுதியை ஒட்டி அமைந்துள்ள முட்புதர் காட்டில் முகாமிட்டுள்ளன. பகல் நேரங்களில் அணை நீர்தேக்க பகுதியில் யானைகள் சுற்றி திரிவதால், பொதுப்பணித்துறை ஊழியர்கள், பணிகளில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர். நேற்று பு.புளியம்பட்டி நகராட்சி நீரேற்று நிலையம் மற்றும் பவானிசாகர் பேரூராட்சி நீரேற்று நிலையம் பகுதியில், இரண்டு யானைகள் சுற்றித் திரிந்தன. இதனால், குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணியாளர்கள் அச்சமடைந்து, நீரேற்று நிலையத்தில் பதுங்கிக் கொண்டனர். இந்த யானைகள் இரவு நேரத்தில் கீழ்பவானி வாய்க்காலை கடந்து, அணை பூங்காவின் சுற்றுச்சுவர் மற்றும் இரும்பு நுழைவாயில் கேட் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி வருவதால், பவானிசாகர், புங்கார் பகுதி மக்கள் பயத்தில் காணப்படுகின்றனர். அணை கரை பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுப்பணித்துறை ஊழியர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X