பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து அதிகரிப்பு; சின்ன வெங்காயம் விலை சரிவு

Added : செப் 30, 2021
Share
Advertisement
ஈரோடு: வரத்து அதிகமானதால், சின்ன வெங்காயம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தில், கீழ்பவானி பாசன பகுதிகளில் அதிகப்படியாக நெல்லும், காளிங்கராயன், தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசன பகுதிகளில் நெல், மஞ்சள் பயிரிடப்படுகிறது. மஞ்சளோடு ஊடு பயிராக சின்ன வெங்காயம் நடவு செய்யப்படுகிறது. கடந்தாண்டில், 18 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் ஊடு பயிராக பயிடப்பட்டது. இதனால்

ஈரோடு: வரத்து அதிகமானதால், சின்ன வெங்காயம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், கீழ்பவானி பாசன பகுதிகளில் அதிகப்படியாக நெல்லும், காளிங்கராயன், தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசன பகுதிகளில் நெல், மஞ்சள் பயிரிடப்படுகிறது. மஞ்சளோடு ஊடு பயிராக சின்ன வெங்காயம் நடவு செய்யப்படுகிறது. கடந்தாண்டில், 18 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் ஊடு பயிராக பயிடப்பட்டது. இதனால் விளைச்சல் அதிகரித்து விலை பல மடங்கு சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், ஒரு கிலோ சின்ன வெங்காயம், 80 முதல், 100 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று ஒரு கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனையானது.

இது குறித்து, ஈரோடு நேதாஜி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் கூறியதாவது: ஈரோடு மார்க்கெட்டுக்கு ஊஞ்சலூர், வெள்ளோடு, கோபி, கொடுமுடி, பாசூர், அம்மாபேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் சின்ன வெங்காயம் வரத்தாகிறது. வரத்து அதிகமாக இருப்பதால் முதல் ரகம் சின்ன வெங்காயம் கிலோ, 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மார்க்கெட்டுக்கு கொடுத்தது போக மீதியுள்ளதை விவசாயிகள் வேன்களில் வைத்து, 5 கிலோ, 100 ரூபாய், 6 கிலோ, 100 ரூபாய் என விற்பனை செய்கின்றனர். குடோன் வைத்துள்ள வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி, இருப்பு வைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X