தமிழ்நாடு

காவிரியில் சாயத்துணி அலசல் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?

Added : செப் 30, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு காவிரி ஆற்றில் சாயத்துணிகள் அலசும் பிரச்னை, ஆட்சி மாற்றத்துடன், ஆளும் மாறியதால், வெளிச்சத்துக்கு வரத்துவங்கியுள்ளது. துணிகளை பறிமுதல் செய்யவும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும் அதிகாரமில்லை என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கைவிரித்துள்ளது.ஈரோடு பகுதியில் அனுமதி பெற்ற, 250 சாய, சலவை, பிளிச்சீங், பிரிண்டிங் பட்டறைகள், அனுமதி பெறாத, 500க்கும் மேற்பட்ட

ஈரோடு: ஈரோடு காவிரி ஆற்றில் சாயத்துணிகள் அலசும் பிரச்னை, ஆட்சி மாற்றத்துடன், ஆளும் மாறியதால், வெளிச்சத்துக்கு வரத்துவங்கியுள்ளது. துணிகளை பறிமுதல் செய்யவும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும் அதிகாரமில்லை என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கைவிரித்துள்ளது.
ஈரோடு பகுதியில் அனுமதி பெற்ற, 250 சாய, சலவை, பிளிச்சீங், பிரிண்டிங் பட்டறைகள், அனுமதி பெறாத, 500க்கும் மேற்பட்ட பட்டறைகள் இயங்குகின்றன. இங்கு சாய, சலவை, பிரின்டிங் செய்த துணிகளை, ஒரு, '407' சரக்கு வேன் அளவுக்கு பல தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி, முறையாக சுத்திகரிப்பு செய்ய, 40 முதல், 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். அத்துணியை, காவிரி ஆற்றில், '407' வேனில் கொண்டு வந்து, ஓடும் நீரில் அலசினால், 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும். இதன் மூலம் காவிரி நீர் விஷமாகி வந்தது. கடந்த பத்தாண்டு கால, அ.தி.மு.க., ஆட்சியில் முருகன் என்பவர், ஒரு வேன் துணி அலச, 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ரூபாய் பெற்று, அப்போதைய எம்.எல்.ஏ.,க்கள், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், கருங்கல்பாளையம் போலீஸ், கருங்கல்பாளையம் செக்போஸ்ட், ஈரோட்டில் உள்ள சில குறிப்பிட்ட நிருபர்களுக்கு ஒரு தொகையை பிரித்து கொடுத்து, அவரும் சம்பாதித்து வந்தார். ஆட்சி மாறியதும் கடந்த ஆகஸ்ட் முதல், தி.மு.க.,வை சேர்ந்த மணி, மனோகரன் உள்ளிட்ட சிலர், ஆட்களை நியமித்து தங்களுக்குத்தான் பணம் தர வேண்டும் எனக்கூறி வசூலில் இறங்கினர். ஆனால், பேரம் படியவில்லை. இதில் பணம் சம்பாதித்து சுகம் கண்டவர்கள், கடந்த வாரம் துணி அலச வேன் வந்ததும், மாசுகட்டுப்பாட்டு வாரியம், போலீஸ், குறிப்பிட்ட நிருபர்களுக்கு தகவல் தெரிவித்து, இரு வேன்கள், துணிகளை சிக்க வைத்தனர். அதிலும் சில நிருபர்கள் மட்டும் செய்தி வராமல் பார்த்து கொள்வதாககூறி பல லகரங்களை வசூலித்து பிரித்துக் கொண்டனர். கடந்த வாரம் ஆற்றில் துணி அலசியது தொடர்பாக இரு வேன், ஏராளமான துணிகள் சிக்கியும், இதுவரை எந்த நடவடிக்கையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எடுக்கவில்லை.

இதுபற்றி, மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஆற்றில் சாய, பிரின்டிங் துணியை அலசுவது தவறு. இருப்பினும், அவர்களது வேன், துணிகளை பறிமுதல் செய்யவும், அவர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு எங்களுக்கு அதிகாரமில்லை. இந்த துணிகள் எந்த ஆலையில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பாக விசாரிக்கிறோம். கலெக்டர் தலைமையிலான குழு பரிந்துரைத்தால், ஆலையின் மின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கை மட்டும் எடுக்க முடியும். இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க இருப்பதால் தற்போது ஏதும் கூற இயலாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X