தமிழ்நாடு

கப்பல் சரக்கு கட்டணம் அதிகரிப்பு: ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் திணறல்

Added : செப் 30, 2021
Share
Advertisement
கரூர்: கப்பல் சரக்கு கட்டணம் உயர்ந்துள்ளதால், ஏற்றுமதி நிறுவனங்கள் திணறி வருகின்றன.கரூர் மாவட்டத்தில் வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், 500க்கும் மேற்பட்டவை இயங்கி வருகின்றன. இங்கு, ஸ்கிரீன், தலையணை உறை, மேஜை விரிப்பு, கைக்குட்டை, சோபா விரிப்பு, துண்டு உட்பட பல்வேறு வீட்டு உபயோக துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து, வெளிநாடுகளுக்கும்

கரூர்: கப்பல் சரக்கு கட்டணம் உயர்ந்துள்ளதால், ஏற்றுமதி நிறுவனங்கள் திணறி வருகின்றன.
கரூர் மாவட்டத்தில் வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், 500க்கும் மேற்பட்டவை இயங்கி வருகின்றன. இங்கு, ஸ்கிரீன், தலையணை உறை, மேஜை விரிப்பு, கைக்குட்டை, சோபா விரிப்பு, துண்டு உட்பட பல்வேறு வீட்டு உபயோக துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து, வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு, 3,500 கோடி ரூபாய் வரை அந்நிய செலாவணி வருவாய் ஈட்டி தருகின்றனர். இந்நிலையில், கப்பல் சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள், 400 சதவீதம் வரை கட்டணங்களை உயர்த்தி இருப்பதால் ஏற்றுமதி நிறுவனங்கள் பரிதவித்து வருகின்றன.

இதுகுறித்து, கரூர் மாவட்ட ஏற்றுமதியாளர் சங்க முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஸ்டீபன்பாபு கூறியதாவது: கொரோனாவுக்கு பின் உலகளாவிய நாடுகளில் சரக்கு கையாள்வதில், புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், சர்வதேச அளவில் சரக்கு கப்பல் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. கப்பல் சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியுள்ளன. இங்கிருந்து, தூத்துக்குடி, சென்னை துறைமுகங்கள் வழியாக சரக்கு அனுப்பப்படுகிறது. அதன்படி, 40 அடி நீளமுள்ள ஒரு கன்டெய்னரில் அமெரிக்காவுக்கு ஆடை அனுப்புவதற்கான கட்டணம், 3,000லிருந்து, 15 ஆயிரம் டாலராகவும், ஐரோப்பாவுக்கு அனுப்புவதற்கு, 2,000லிருந்து, 8,000 டாலராகவும் உயர்ந்துள்ளது.போக்குவரத்து செலவினங்களை வெளிநாட்டு வர்த்தகர்கள் ஏற்றுக் கொண்டாலும் கூட, உற்பத்தி நிறுவனமே செலவிட வேண்டி வந்தாலும், அதிகளவிலான கட்டண உயர்வு, ஏற்றுமதி வர்த்தகத்துக்கு பாதகத்தையே ஏற்படுத்துகிறது. மேலும் போக்குவரத்து செலவுகளை கணக்கிட்டு குறைந்த எண்ணிக்கையில் ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் வழங்குகின்றன. இதனால், குஷன் மூலம் தயாரிக்கும் வீட்டு உபயோக பொருட்களின் ஏற்றுமதி, 50 சதவீதம் குறைந்துள்ளது. உலகில், 11 முக்கிய கப்பல் நிறுவனங்கள் கன்டெய்னர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தியுள்ளன. இதே நிலை தொடர்ந்தால் ஏற்றுமதி நிறுவனங்கள் பெரும் வர்த்தக இழப்பை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X