சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லூரி மாணவி உட்பட இருவர் விபரீத முடிவு

Added : செப் 30, 2021
Share
Advertisement
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இருவேறு இடத்தில், கல்லூரி மாணவி உட்பட இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த பழையூரை சேர்ந்தவர் மகேந்திரன், 21. கூலித்தொழிலாளி; இவர் தன் அக்கா மகளை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். ஆனால் அவரது அக்கா மறுத்து விட்டார். மனமுடைந்த மகேந்திரன், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இருவேறு இடத்தில், கல்லூரி மாணவி உட்பட இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த பழையூரை சேர்ந்தவர் மகேந்திரன், 21. கூலித்தொழிலாளி; இவர் தன் அக்கா மகளை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். ஆனால் அவரது அக்கா மறுத்து விட்டார். மனமுடைந்த மகேந்திரன், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


* பாகலூர் அடுத்த பெலத்தூர் வி.ஓ.சி., நகரை சேர்ந்தவர் நாகராஜ் மகள் ஷோபனா, 21; கர்நாடகா மாநிலத்திலுள்ள தனியார் கல்லூரியில், பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், பாகலூரை சேர்ந்த வெங்கி என்பவரை காதலித்தார். இதை, அவரது தாய் ராஜம்மா கண்டித்துள்ளார். மனமுடைந்த ஷோபனா, கடந்த, 27ல் மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாகலூர் போலீசார் நேற்று முன்தினம் சடலத்தை மீட்டு, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X