பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை முறையில் காய்கறி சாகுபடி பயிற்சி

Added : செப் 30, 2021
Share
Advertisement
ப.வேலூர்: கபிலர்மலை வட்டார வேளாண் துறை அட்மா திட்டம் சார்பில் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தேவனம்பாளையம் பஞ்., கருந்தேவன்பாளையம் கிராமத்தில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி குறித்த பயிற்சி நடந்தது. தோட்டக்கலை உதவி இயக்குனர் கார்த்திகா தலைமை வகித்தார். பல்வேறு மானிய திட்டங்கள், இயற்கை பூச்சிவிரட்டிகளை பயன்படுத்துவது, பஞ்சகவ்யா,

ப.வேலூர்: கபிலர்மலை வட்டார வேளாண் துறை அட்மா திட்டம் சார்பில் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தேவனம்பாளையம் பஞ்., கருந்தேவன்பாளையம் கிராமத்தில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி குறித்த பயிற்சி நடந்தது. தோட்டக்கலை உதவி இயக்குனர் கார்த்திகா தலைமை வகித்தார். பல்வேறு மானிய திட்டங்கள், இயற்கை பூச்சிவிரட்டிகளை பயன்படுத்துவது, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் ஆகியவற்றை பயன்படுத்தி அதிக மகசூல் எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. இயற்கை உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் எடுப்பது, நீர்ப்பற்றாக்குறை காலங்களில் இயற்கை உரங்களினால் மண்ணுக்கு விளையும் நன்மை, களை கட்டுப்பாடு, மண்புழு உர பயன்பாடு, விவசாயிகள் மண்புழு உரம் தயாரிக்கும் முறை, விளைபொருட்களை விவசாயிகளே உழவர் நிறுவனம் அமைத்து சந்தைப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஓய்வுபெற்ற வேளாண் துணை அலுவலர் மாதேஸ்வரன் விளக்கினார். தோட்டக்கலை உதவி அலுவலர் சிவமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X