பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழையால் சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் வருகை, தொடர் மழையால் பள்ளிபாளையம் பகுதியில் சாகுபடி அதிகரிக்க வாய்ப்புள்ளது. பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. பருவமழை, வாய்க்காலில் தண்ணீர் வந்தால் விவசாயிகள் சாகுபடி செய்வர். கடந்த ஆகஸ்டில் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நெல் சாகுபடியில்

பள்ளிபாளையம்: மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் வருகை, தொடர் மழையால் பள்ளிபாளையம் பகுதியில் சாகுபடி அதிகரிக்க வாய்ப்புள்ளது. பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. பருவமழை, வாய்க்காலில் தண்ணீர் வந்தால் விவசாயிகள் சாகுபடி செய்வர். கடந்த ஆகஸ்டில் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். கடந்த ஓரிரு மாதமாக பள்ளிபாளையம் முழுவதும் பரவலாக மழை பெய்கிறது. வடகிழக்கு பருவமழையும் அதிகளவு பெய்ய வாய்ப்புள்ளது. மழையை பயன்படுத்தி, நெல் மட்டுமில்லாமல், தானிய வகைகள், காய்கறி வகைகள் உள்ளிட்ட பல வகை பயிர்களால் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. பாசனத்திற்கு வரும் தண்ணீரும், மழையையும் முழுமையாக பயன்படுத்தி கொள்ளும் வகையில் விவசாயிகள் சாகுபடியில் ஈடுபடுவதால் சாகுபடி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X