பொது செய்தி

தமிழ்நாடு

அமைப்பு சாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் இணைப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களை தேசிய தரவு தளத்தில் இணைப்பதற்கான சிறப்பு முகாம் ராசிபுரம் அடுத்த வடுகம் ஊராட்சியில் நடந்தது. தொழிலாளர் அமலாக்க உதவி கமிஷனர் சங்கர் தலைமை வகித்து பேசியதாவது: இது தொடர்பான சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும். பொது சேவை மையங்களில் அமைப்பு சாரா தொழிலாளர்களான தேசிய ஊரக வேலை உறுதி திட்ட

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களை தேசிய தரவு தளத்தில் இணைப்பதற்கான சிறப்பு முகாம் ராசிபுரம் அடுத்த வடுகம் ஊராட்சியில் நடந்தது. தொழிலாளர் அமலாக்க உதவி கமிஷனர் சங்கர் தலைமை வகித்து பேசியதாவது: இது தொடர்பான சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும். பொது சேவை மையங்களில் அமைப்பு சாரா தொழிலாளர்களான தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள். கய தொழில் செய்பவர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தெரு வியாபாரிகள், ரிக் ஷா இழுப்பவர்கள், கட்டுமான தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள். விவசாய தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் அனைவரும், இந்த தளத்தில் பதிவேற்றி அதற்கான அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம். மேலும், மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் சமூக பாதுகாப்பு திட்ட பயன்களை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். முகாமில், ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள் கலந்து கொண்டு, 12 இலக்க அடையாள அட்டை பெற்றுக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X