பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவர் சேர்க்கை 150ஆக அதிகரிக்க வாய்ப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், அரசு மருத்துவ கல்லூரி கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூலை, 28ல் தேசிய மருத்துவ ஆணையக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம், ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். 150 மாணவ, மாணவியர் மருத்துவம் படிக்கும் வகையில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், 100 இடங்களுக்கு மட்டுமே மத்திய அரசு

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், அரசு மருத்துவ கல்லூரி கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூலை, 28ல் தேசிய மருத்துவ ஆணையக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம், ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். 150 மாணவ, மாணவியர் மருத்துவம் படிக்கும் வகையில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், 100 இடங்களுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. நீலகிரி, விருதுநகர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு, 150 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கி உள்ள நிலையில், நாமக்கல்லுக்கு, 100ஆக குறைத்து அனுமதி வழங்கியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி கூறியதாவது: தேசிய மருத்துவ ஆணையத்தில் இருந்து வந்த உறுப்பினர்கள், கல்லூரியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதனால், 150 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.ஆனால், 100 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மத்திய அரசிடம் பேசி வருகிறார். விரைவில், 150 ஆக உயர்த்தி பெறுவதற்கான ஆணை வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X