பொது செய்தி

தமிழ்நாடு

காவிரியில் தடுப்பணை திட்டம் மறுபரிசீலனை செய்ய அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
நாமக்கல்: காவிரி ஆற்றில், 700 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி, தமிழக முதல்வருக்கு, அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம் துவங்கப்பட்டது.தமிழக சட்டசபையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், 'நாமக்கல் மாவட்டம், மோகனூர், கரூர் மாவட்டம் நெரூர் காவிரி ஆற்றின் குறுக்கே, 700 கோடி ரூபாய் மதிப்பில், தடுப்பணை அமைக்கப்படும்' என, அறிவித்தார். ஆனால்,

நாமக்கல்: காவிரி ஆற்றில், 700 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி, தமிழக முதல்வருக்கு, அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம் துவங்கப்பட்டது.
தமிழக சட்டசபையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், 'நாமக்கல் மாவட்டம், மோகனூர், கரூர் மாவட்டம் நெரூர் காவிரி ஆற்றின் குறுக்கே, 700 கோடி ரூபாய் மதிப்பில், தடுப்பணை அமைக்கப்படும்' என, அறிவித்தார். ஆனால், அத்திட்டத்தை செயல்படுத்தினால், மோகனூருக்கு மேல் பகுதி மட்டுமே தண்ணீர் தேங்கி நிற்கும். கீழ்பகுதிக்கு தண்ணீர் வராமல் விவசாய நிலங்கள் காய்ந்து பாலைவனமாக மாறும் சூழல் ஏற்பட்டு, பல கோடி ரூபாய் திட்டம் வீணாகும். மேலும், காட்டுப்புத்தூர் பகுதியில், 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், நீரேற்று பாசனம், கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவை தடைபடும். அதனால், மோகனூர்-நெரூர் என்ற திட்டத்தை மறுபரிசீலனை செய்து, ஒருவந்தூர் அல்லது வடுகப்பட்டி- நெரூர் இடையே தடுப்பணை அமைக்க வேண்டும் என, விவசாய முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், விவசாய முன்னேற்ற கழகத்தின் சார்பில், ஆலோசனை கூட்டம், ஒருவந்தூரில் நடந்தது. நிறுவன தலைவர் செல்ல ராசாமணி தலைமை வகித்தார். கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாமக்கல், திருச்சி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளை, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், தமிழக முதல்வருக்கு, 10 ஆயிரம் அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, முதல் கட்டமாக, 500 அஞ்சலட்டை நேற்று அனுப்பப்பட்டது. பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், மோகனூர் வாய்க்கால் பாசனதாரர்கள் சங்க தலைவர் சேனாபதி, காட்டுப்புத்தூர் வாய்க்கால் பாசனதாரர்கள் சங்க நிர்வாகி பச்சமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X