பொது செய்தி

தமிழ்நாடு

மண்வளம் பாதுகாப்பு விவசாயிகளுக்கு பயிற்சி

Added : செப் 30, 2021
Share
Advertisement
ப.வேலூர்: கபிலர்மலை வட்டார வேளாண் துறை சார்பில், கொத்த மங்கலம் கிராமத்தில் மாதிரி கிராமத்திற்கான விவசாயிகள் பயிற்சி நடந்தது. வேளாண் இணை இயக்குனர் அசோகன் தலைமை வகித்து, பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து பேசினார். மண்வளத்தை பேண வேண்டிய அவசியம், வேளாண் கருவிகளை மண்வள மேம்பாட்டுக்கு எவ்வாறு முறையாக பயன்படுத்துவது, மண்வள மேம்பாட்டில் இயற்கை உரங்களின் பங்கு, பசுந்தாள்,

ப.வேலூர்: கபிலர்மலை வட்டார வேளாண் துறை சார்பில், கொத்த மங்கலம் கிராமத்தில் மாதிரி கிராமத்திற்கான விவசாயிகள் பயிற்சி நடந்தது. வேளாண் இணை இயக்குனர் அசோகன் தலைமை வகித்து, பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து பேசினார். மண்வளத்தை பேண வேண்டிய அவசியம், வேளாண் கருவிகளை மண்வள மேம்பாட்டுக்கு எவ்வாறு முறையாக பயன்படுத்துவது, மண்வள மேம்பாட்டில் இயற்கை உரங்களின் பங்கு, பசுந்தாள், பசுந்தழை உரங்களை பயன்படுத்தி மண்வளம் காப்பது, மண்ணின் கெட்டித்தன்மையை மாற்றி மண்ணின் காற்றோட்டம், நீர்பிடிப்புத்தன்மையை மேம்படுத்துவது மற்றும் நுண்ணீர் பாசனம் அமைப்பதால் விவசாயிகள் பெறக்கூடிய கூடுதல் அனுகூலங்கள் ஆகியவற்றை ஓய்வு பெற்ற வேளாண் பேராசிரியர் ராஜா விளக்கினார். தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் செல்வி, வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தசாமி நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் அன்புச்செல்வி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X