பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு காய்ச்சல் பரவுதலை தடுக்க முழு மூச்சுடன் செயல்பட அறிவுரை

Added : செப் 30, 2021
Share
Advertisement
நாமக்கல்: ''டெங்கு காய்ச்சல் பரவுதலை தடுக்க முழு மூச்சுடன் செயல்பட வேண்டும்,'' என, கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசினார்.நாமக்கல் கலெக்டர் அலுலகத்தில், சுகாதாரத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசியதாவது: நாமக்கல் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலர்கள்,

நாமக்கல்: ''டெங்கு காய்ச்சல் பரவுதலை தடுக்க முழு மூச்சுடன் செயல்பட வேண்டும்,'' என, கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுலகத்தில், சுகாதாரத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசியதாவது: நாமக்கல் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலர்கள், சுகாதார பணிகளை, பொது சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். ஒரு சில நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கண்டறியப்படும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க, முழு மூச்சுடன் செயல்பட வேண்டும். கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கழுவி சுத்தம் செய்து, தினமும் குளோரினேஷன் செய்தல். தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், டயர்களை அகற்றுதல், சாக்கடை அடைப்புகளை கண்டறிந்து உடனடியாக சீர் செய்தல் போன்ற பணிகள் நடந்த வருவதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X