பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் நகர கூட்டுறவு வங்கி வரவு - செலவு ஆலோசனை

Added : செப் 30, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் நகர கூட்டுறவு வங்கியின் வரவு-செலவு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் திருவிகா தலைமை வகித்து பேசியதாவது: நகரக் கூட்டுறவு வங்கி மைய அலுவலகம் மற்றும் செங்குந்தபுரம், வெங்கமேடு கிளைகளுடன் லாபகரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த, 2019- 20ம் ஆண்டில் வங்கியின் லாபம், 18.52 லட்சம் ரூபாய் இருந்தது. 2021ல், 3.75 லட்சம் ரூபாய் என, குறைந்துள்ளது. கொரோனா நோய் தொற்றுக் காலத்தில்

கரூர்: கரூர் நகர கூட்டுறவு வங்கியின் வரவு-செலவு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் திருவிகா தலைமை வகித்து பேசியதாவது: நகரக் கூட்டுறவு வங்கி மைய அலுவலகம் மற்றும் செங்குந்தபுரம், வெங்கமேடு கிளைகளுடன் லாபகரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த, 2019- 20ம் ஆண்டில் வங்கியின் லாபம், 18.52 லட்சம் ரூபாய் இருந்தது. 2021ல், 3.75 லட்சம் ரூபாய் என, குறைந்துள்ளது. கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் அனைத்து வர்த்தகமும் முடங்கியதால், வங்கியின் லாபமும் குறைந்தது. மேலும் புதிய அரசிடமிருந்து மகளிர் சுய உதவிக்குழுக்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு அதிகளவில் கடனுதவி வழங்க உத்தரவு வரப்பெற்றுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து வங்கியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுமேலாளர் சேகர், மேலாளர்கள் குகநாதன், செந்தில், வங்கி இயக்குனர்கள் மல்லிகா,சாமிநாதன், ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X