சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தென்னிலை, தா.மலையில் விபத்து: இருவர் உயிரிழப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
கரூர்: தென்னிலை மற்றும் தான்தோன்றிமலையில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம், தெற்கு பாளையம் மேட்டை சேர்ந்தவர் சிவா, 40; தென்னிலை அருகே தங்கி வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தென்னிலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற பைக் மோதியது. அதில் கீழே விழுந்த அதே இடத்தில் சிவா உயிரிழந்தார்.

கரூர்: தென்னிலை மற்றும் தான்தோன்றிமலையில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம், தெற்கு பாளையம் மேட்டை சேர்ந்தவர் சிவா, 40; தென்னிலை அருகே தங்கி வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தென்னிலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற பைக் மோதியது. அதில் கீழே விழுந்த அதே இடத்தில் சிவா உயிரிழந்தார். தென்னிலை போலீசார் விசாரிக்கின்றனர்.

* ராயனூர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் நாகேந்திரன், 34; இவர் நேற்று மாலை, தான்தோன்றிமலை சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே இருந்த தடுப்பு சுவரில் எதிர்பாராதவிதமாக பைக் மோதியது. அதில் படுகாயமடைந்த நாகேந்திரன், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X