முள்ளம்பன்றியால் காயம் புலிக்குட்டிக்கு சிகிச்சை

Added : செப் 30, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறையில் புதரில் இருந்து மீட்கப்பட்ட, ஒரு வயது புலி குட்டிக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், மானாம்பள்ளி வனச்சரம், முடீஸ் பகுதியில் புலி நடமாடுவதாக மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். முத்துமுடி எஸ்டேட் புதரில் பதுங்கிய புலியை நேற்று முன்தினம் இரவு, வனத்துறையினர் வலையில் பிடித்த பின்,
 முள்ளம்பன்றியால் காயம் புலிக்குட்டிக்கு சிகிச்சை

வால்பாறை : வால்பாறையில் புதரில் இருந்து மீட்கப்பட்ட, ஒரு வயது புலி குட்டிக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், மானாம்பள்ளி வனச்சரம், முடீஸ் பகுதியில் புலி நடமாடுவதாக மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். முத்துமுடி எஸ்டேட் புதரில் பதுங்கிய புலியை நேற்று முன்தினம் இரவு, வனத்துறையினர் வலையில் பிடித்த பின், கூண்டில் அடைத்தனர்.அதன் பின், வனஉயிரின மீட்பு மையத்துக்கு கொண்டு சென்றனர். உடல் சோர்வாக காணப்பட்ட புலிக்கு வனத்துறையினர் நேற்று காலை இறைச்சியை உணவாக வழங்கினர். இருப்பினும், புலி சோர்வான நிலையில் இருந்தது.

வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன் கூறுகையில், ''மீட்கப்பட்ட ஆண் புலிக்கு ஒரு வயது ஆகிறது. அதன் உடலில் இருந்து முள்ளம்பன்றியின் இரண்டு முட்கள் எடுக்கப்பட்டுள்ளன. முள்ளம்பன்றியை புலி உட்கொண்டதால், உடலில் பல இடங்களில் முள்ளால் காயம் ஏற்பட்டு, உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம். காயம்பட்ட பகுதியில் சிகிச்சை அளித்து வருகிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X