பொது செய்தி

தமிழ்நாடு

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட நிதியமைச்சர்: 2 லேப்டாப்களால் பிரச்னை!

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (179)
Share
Advertisement
சென்னை: இன்று (செப்., 30) காலை 6 மணிக்கு தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 லேப்டாப்களை எடுத்து வந்ததால் மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதனால் கடும் வாக்குவாதம் எழுந்தது.இரண்டு லேப்டாப்களை எடுத்துச் செல்லக் கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் பயணிகளுக்கு இல்லை என
நிதியமைச்சர், பழனிவேல் தியாகராஜன், பிடிஆர், ptr,

சென்னை: இன்று (செப்., 30) காலை 6 மணிக்கு தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 லேப்டாப்களை எடுத்து வந்ததால் மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதனால் கடும் வாக்குவாதம் எழுந்தது.

இரண்டு லேப்டாப்களை எடுத்துச் செல்லக் கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் பயணிகளுக்கு இல்லை என அமைச்சர் கூறியுள்ளார். ஆனாலும், உதவி ஆய்வாளர் 2 லேப்டாப்களை எடுத்துச் செல்லக்கூடாது என அனுமதி மறுத்துள்ளார். பிறகு தான் நிதியமைச்சர் என்று கூறியுள்ளார்.
அதற்குள் இவ்விஷயம் மூத்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். அமைச்சரை தடுத்து நிறுத்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை எஸ்.ஐ.,யும் மன்னிப்பு கேட்டுள்ளார். பின்னர் 2 லேப்டாப்களுடன் பயணிக்க அவரை அனுமதித்துள்ளனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (179)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
03-அக்-202120:17:29 IST Report Abuse
spr செய்தி தவராகக் குறிப்பிடப்பட்டு "பரபரப்பு செய்தி" என வெளியிடப்பட்டுள்ளதா பொதுவாக கைப்பை (Cabin luggage) எடை குறிப்பிட்ட கிலோவுக்கு மிகாமலிருந்தால் இந்திய உள்நாட்டுப் பயணத்தில் பிரச்சினை எதுவுமில்லை ஆனால் அவை தனித்தனியே சோதனை செய்பவர் பார்க்கும் வகையில் வைக்கப்பட வேண்டும் வெளிநாட்டிலிருந்து வந்தால் ஒன்று பயணியர் சொந்த பயன்பாடு என்றும் இரண்டாவது கணிணிக்குரிய சுங்க வரி கட்டப்பட்டிருக்கிறதா என ஆதாரம் கேட்கப்படும் இவர் ஒரு பந்தா பரமசிவம் என்ன கிறுக்குத்தனம் செய்தாரோ நடிகர்களும் அரசியல்வியாதிகளும் நல்லதோ கேட்டதோ தங்களை பற்றி செய்திப் பத்திரிகைகள் ஊடகங்கள் பேச வேண்டுமென விரும்பி இப்படி ஏதேனும் செய்வது வழக்கமே
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
03-அக்-202103:31:04 IST Report Abuse
meenakshisundaram இவர் போகிற போக்கை பார்த்தா ஸ்டாலினை மிஞ்சிடுவார் போல 'பந்தா 'காட்டுறதிலே -அதிமுகவை புறக்கணிப்போம் ?? இந்த பந்தா வை விடவா ?ஆனா ஒன்னு நம்ம தமிழனை எப்படி எல்லாம் ஏமாத்தணும்னு 'அந்த' குடும்பத்துக்கு நல்லா தான் தெரிஞ்சிருக்கு
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
03-அக்-202103:22:30 IST Report Abuse
meenakshisundaram இவரு கொஞ்சம் வசதி பெருத்த ஆள் எல்லாமே டபுள் உட்கார்ற சீட் கூட ஒன்னு பத்தாது ,ரெண்டு வேணும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X