பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் வேலை கேட்கிறார்கள் உயிரை துச்சமென மதித்தவர்கள்

Added : செப் 30, 2021
Share
Advertisement
கோவை : கோவை மாவட்டத்தில் முன்களப்பணியாளராக வேலை பார்த்து பணி நீக்கம் செய்யப்பட்ட பரப்புரையாளர்கள் 120 பேர், தங்களுக்கு மீண்டும் பணி கோரி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.துாய்மை பாரதம் திட்டத்தில் வேலை பார்க்க நான்கரை ஆண்டுக்கு முன் ஒப்பந்த அடிப்படையில் மாவட்டம் தோறும் பரப்புரையாளர்கள், பணி நியமனம் செய்யப்பட்டனர்.மாதம், 10 ஆயிரத்து 800 ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட்ட


கோவை : கோவை மாவட்டத்தில் முன்களப்பணியாளராக வேலை பார்த்து பணி நீக்கம் செய்யப்பட்ட பரப்புரையாளர்கள் 120 பேர், தங்களுக்கு மீண்டும் பணி கோரி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

துாய்மை பாரதம் திட்டத்தில் வேலை பார்க்க நான்கரை ஆண்டுக்கு முன் ஒப்பந்த அடிப்படையில் மாவட்டம் தோறும் பரப்புரையாளர்கள், பணி நியமனம் செய்யப்பட்டனர்.மாதம், 10 ஆயிரத்து 800 ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட்ட இவர்கள், திடக்கழிவு மேலாண்மை, மக்கள் தொகை கணக்கெடுப்பு, வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்போர் கணக்கெடுப்பு, கொரோனா விழிப்புணர்வு பிரசாரம், கபசுர குடிநீர் வினியோகம் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில், வீடு வீடாக சென்று நோய் பாதித்தவர்களை கண்டறிதல், தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.தற்போது ஒப்பந்ததாரர் மாறிய நிலையில், பரப்புரையாளர்களுக்கும் வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக வந்த ஒப்பந்ததாரர், புதியவர்களை பரப்புரையாளராக நியமிக்க ஏற்பாடு செய்து வருகிறார்.

இந்நிலையில், வேலை இழந்த பழைய பரப்புரையாளர்கள், பி.எம்.எஸ்., சங்கம் சார்பில் நேற்று மாவட்ட கலெக்டர், பேரூராட்சிகளின் உதவி இயக்குனரிடம் மனு அளித்தனர்.'பெருந்தொற்று காலத்தில் உயிரை துச்சமென மதித்து, வேலை பார்த்த தங்களுக்கே மீண்டும் வேலை அளிக்க வேண்டும்' என்று மனுவில் கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X