பொது செய்தி

இந்தியா

மனித கழிவுகளை அள்ளும் பணியாளர் இறந்தால் அரசே பொறுப்பு: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛இந்தியாவில் நச்சுத்தன்மை வாய்ந்த குப்பைகள் மற்றும் மனிதக் கழிவுகளை அள்ளும் தூய்மைப் பணியாளர்கள் இறக்க நேர்ந்தால் அதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்,'' என தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அருண்குமார் மிஸ்ரா, மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு
மனித கழிவுகள், அள்ளும் பணியாளர், இறப்பு, மாநில அரசே பொறுப்பு, தேசிய மனித உரிமைகள் ஆணையம்,

புதுடில்லி: ‛‛இந்தியாவில் நச்சுத்தன்மை வாய்ந்த குப்பைகள் மற்றும் மனிதக் கழிவுகளை அள்ளும் தூய்மைப் பணியாளர்கள் இறக்க நேர்ந்தால் அதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்,'' என தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அருண்குமார் மிஸ்ரா, மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: மனிதக் கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் இறக்க நேர்ந்தால் அவர்களது இறப்பிற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.


latest tamil news


மனிதக் கழிவுகளை அள்ளுதல், நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் போது, தேவையான கையுறைகள், தலைக்கவசம், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பிற்கு அந்தந்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தை மத்திய அமைச்சரவையின் அனைத்துத் துறைகளுக்கும், மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-செப்-202119:16:15 IST Report Abuse
அப்புசாமி நேத்திக்கி ரிலீஸ் ஆன ஐஃபோன், லேட்டஸ்ட் கம்ப்யூட்டர்,ரஃபல், ஏவுகணைகள், ட்ரோன்கள் எல்லாம் லட்சம் கோடி ரூவா குடுத்து வாங்குவாங்க. இங்கெ மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு டெக்னாலஜி அமெரிக்கா, ரஷ்யா, ஃப்ரான்சுலே இருந்தாலும் கொண்டார மாட்டாங்க..
Rate this:
Cancel
Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ
30-செப்-202116:12:43 IST Report Abuse
Unmai Vilambi Similarly, allowing humans to clear animal waste should also be prevented. In some big gated communities, housekeeping staff are forced to clear wastes of pet animals. I have fought for them many times that it is the responsibility of pet owners to dispose the waste. But they took even this issue to Animal Welfare Board and wrote to Menaka Gandhi India is the only country with maximum Rabies cases and deaths and maximum stray dogs
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
30-செப்-202116:08:30 IST Report Abuse
GANESUN வரிப்பணத்தில் அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் வீரனான திட்டங்களுக்கும் செலவிடப்படுகிறது அப்புறம் எங்கே அடிமட்ட ஊழியர்களுக்கு செலவிடுவது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X