அதிகாரத்திற்காக சண்டை போடும் காங்கிரசார்; கெஜ்ரிவால் தாக்கு

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சண்டிகர்: பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியை மறந்து அதிகாரத்திற்காக சண்டை போடுவதாக ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அடுத்த 5 மாதங்களில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் உட்கட்சி பிரச்னையால் ஆட்டம் கண்டுவருகிறது.
AAP, Arvind Kejriwal, Slams, Punjab, Congress, ஆம்ஆத்மிகட்சி, அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப், காங்கிரஸ், விமர்சனம்

சண்டிகர்: பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியை மறந்து அதிகாரத்திற்காக சண்டை போடுவதாக ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அடுத்த 5 மாதங்களில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் உட்கட்சி பிரச்னையால் ஆட்டம் கண்டுவருகிறது. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் டில்லியில் ஆளும் ஆம்ஆத்மி கட்சியும் களத்தில் குதித்துள்ளன. அக்கட்சியும் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (செப்.,30) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர். ஆட்சியை மறந்துவிட்டு காங்கிரஸ் கட்சியினர் அரசாங்கத்தை கேலி செய்கின்றனர். அதிகாரத்திற்காக மோசமான சண்டை நடக்கிறது. பஞ்சாபில் ஒவ்வொரு காங்., தலைவரும் முதல்வராக விரும்புகின்றனர். பஞ்சாபின் நிலைமை மோசமாக உள்ளது. ஆம்ஆத்மி மட்டுமே மக்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறது. பஞ்சாபில் அடுத்ததாக ஆம்ஆத்மி கட்சி ஆட்சியமைக்கும். பஞ்சாபின் மின்சார பிரச்னைக்கு தீர்வு காண்போம்.


latest tamil news



நாங்கள் செய்ய முடியாததை வாக்குறுதியாக அளிப்பதில்லை. அனைவருக்கும் சுகாதார அட்டை வழங்கப்படும். இதன்மூலம் மக்களுக்கு இலவச மற்றும் தரமான சுகாதாரத்தை அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார். மேலும் பஞ்சாப் மாநில காங்., தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்த சித்து ஆம்ஆத்மி கட்சியில் சேரப்போவதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‛இது ஒரு கற்பனையான கேள்வி, அப்படி ஏதாவது நடந்தால் நாங்கள் உங்களுக்குதான் (செய்தியாளர்களுக்கு) முதலில் சொல்வோம்,' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
30-செப்-202118:51:36 IST Report Abuse
konanki அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அதிகாரத்தில் இருப்பது இந்தியாவின் இறையாண்மை க்கு கேடு.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
30-செப்-202118:50:18 IST Report Abuse
konanki அரவிந்த் கெஜ்ரிவால் க்கு பஞ்சாப் ஆட்சி கிடைத்தால் பாகிஸ்தான் சீனா வுக்கு கொண்டாட்டம்.
Rate this:
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
30-செப்-202117:34:56 IST Report Abuse
Mayavan Mayavan நீங்க உங்க பதவியை வேறு யாருக்காவது விட்டு கொடுங்கள் பார்க்கலாம். வாய் பந்தல் போடா கூடாது. அரசியலுக்கு வருவதே பதவி ஆசைக்காகத்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X