கோர்ட் செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு வேட்பு மனு தாக்கல் அக்., 4 க்கு நீட்டித்து உத்தரவு

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை : புதுச்சேரியில், உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதியை, அக்., 4ம் தேதிக்கு நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதி, சுயேச்சை எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார் தாக்கல் செய்த மனு:ஐந்து நகராட்சி, 10 பஞ்சாயத்துக்களுக்கான தேர்தல் அறிவிப்பு, இம்மாதம் 22 ம் தேதி வெளியிடப்பட்டது. ஆதிதிராவிடர்களின் எண்ணிக்கை


சென்னை : புதுச்சேரியில், உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதியை, அக்., 4ம் தேதிக்கு நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதி, சுயேச்சை எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார் தாக்கல் செய்த மனு:ஐந்து நகராட்சி, 10 பஞ்சாயத்துக்களுக்கான தேர்தல் அறிவிப்பு, இம்மாதம் 22 ம் தேதி வெளியிடப்பட்டது. ஆதிதிராவிடர்களின் எண்ணிக்கை அடிப்படையில், வார்டுகள் ஒதுக்கப்பட வேண்டும். புதுச்சேரி நகராட்சியில், ஆதிதிராவிடருக்கு நான்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிட மக்கள் தொகையின் அடிப்படையில், இந்த வார்டுகள் ஒதுக்கப்படவில்லை. அதிக எண்ணிக்கையில் ஆதிதிராவிடர்கள் உள்ள வார்டுகள், அவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை. குறைந்த எண்ணிக்கையில் உள்ள வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த குறைபாடுகள் குறித்து, புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. தேர்தல் அறிவிப்புக்கு முன், தவறுகள் சரி செய்யப்படவில்லை. எனவே, புதுச்சேரி மாநில தேர்தல் ஆணைய அறிவிப்பை, ரத்து செய்ய வேண்டும். ஆதிதிராவிடருக்கான இடங்கள் ஒதுக்கீட்டு விதிகளை பின்பற்ற, உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் என்.மனோகரன் வாதாடினார். புதுச்சேரி அரசு தரப்பில் பதில் அளிக்க, அவகாசம் கோரப்பட்டது.இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்த தேர்தல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆதிதிராவிடர்கள் அதிகம் உள்ள வார்டுகளை ஒதுக்காமல், குறைவாக இருக்கும் வார்டுகளை ஒதுக்கியிருப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தேர்தல் அறிவிப்பு வௌியிடப்பட்டு, 30 ம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் தரப்பில் குறைபாடுகள் தெரிவித்துள்ளதால், வேட்புமனு தாக்கல் தேதியை நீட்டிக்க வேண்டியதுள்ளது. அதன்படி, அக்., 4 ம் தேதிக்கு, வேட்புமனு தாக்கல் நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு விசாரணையை, இன்றைக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X