பொது செய்தி

இந்தியா

சுகாதாரத்தில் புதிய தேசிய கொள்கை; பிரதமர் மோடி

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: சுகாதாரத்துறையில், இந்திய அளவில் மாற்றத்தை ஏற்படுத்த புதிதாக, தேசிய அளவில் கொள்கையை உருவாக்கி வருகிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா, சிரோஹி, ஹனுமன்கார்க், தவுசா மாவட்டங்களில் அமைய உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அடிக்கல் நாட்டினார். மேலும் பெட்ரோ கெமிக்கல் தொழில்நுட்ப
பிரதமர், நரேந்திரமோடி, மோடி, சுகாதாரத்துறை, மாற்றம்,

புதுடில்லி: சுகாதாரத்துறையில், இந்திய அளவில் மாற்றத்தை ஏற்படுத்த புதிதாக, தேசிய அளவில் கொள்கையை உருவாக்கி வருகிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா, சிரோஹி, ஹனுமன்கார்க், தவுசா மாவட்டங்களில் அமைய உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அடிக்கல் நாட்டினார். மேலும் பெட்ரோ கெமிக்கல் தொழில்நுட்ப மையத்தையும் திறந்து வைத்தார்.

பின்னர் நரேந்திர மோடி பேசியதாவது: உலக நாடுகளுக்கு, சுகாதாரத்துறையில் கோவிட் பெருந்தொற்று பல்வேறு பாடங்களை கற்று கொடுத்துள்ளது. ஒவ்வொரு நாடும், தனது சொந்த வழியில் கோவிட் பிரச்னையை சமாளித்து வருகிறது. இந்த நேரத்தில், இந்தியா தனது பலத்தையும், தன்னிறைவை எட்டுவதற்கு தீர்மானம் கொண்டுள்ளது.


latest tamil news



இந்திய சுகாதாரத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த புதிய தேசிய சுகாதார கொள்கையை உருவாக்கி வருகிறோம். தூய்மை பாரத் முதல் ஆயுஷ்மான் பாரத் வரையிலும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டலும் உள்ளிட்டவை இதன் ஒரு அங்கமாகும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சுகாதார சேவை கிடைக்க செய்வதில் உதவும். சிறந்த மருத்துவமனைகள், ஆய்வகங்கள், மருந்து கடைகள் ஆகியவற்றை ஒரே நொடியில் அறிய முடியும். நோயாளிகளின் மருத்துவ ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
30-செப்-202120:53:55 IST Report Abuse
Rajas தேசிய கொள்கை எப்படி கொண்டு வர முடியும். உணவு பழக்கங்கள் மாறி விட்டதால் இந்தியர்கள் எல்லோரும் எதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பாதிப்பு Geographical என்ற வகையில் இருக்கிறது. வட இந்தியாவில் இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் அதிகம். சில மாநிலங்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகளுக்கு பாதிப்பு. இதை தவிர மழை, வெயில், பனி என்று இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வேறு வேறு பாதிப்புகள். ஒன்றும் புரியவில்லை. வழக்கம் போல தேரை இழுத்து வீதியில் விட்டு விட்டு ஓடி விடுவார்களா.
Rate this:
Cancel
30-செப்-202118:58:36 IST Report Abuse
அப்புசாமி ஏற்கனவே 2017லேயே மதுரை எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டி செங்கல் கூட காணாம போயிருச்சு. அப்பப்போ நாலு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுறதுதான் புதிய மருத்துவ கொள்கை போல...
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்எங்கெல்லாம் மருத்துவ "சேவை" (லெமன் சேவையல்ல) இருக்குன்னு ஒரு எக்ஸல் ஷீட் டேடா பேங்க் போட்டு அத பாத்துக்க ஒரு கன்சல்ட்டன்சி நிறுவனத்துக்கு சில கோடிகளை சேவைக் கட்டணமாக கொடுத்து வாழவளிக்கிறாங்க மதுரைல எயம்ஸ தேடறமாதிரி அதெல்லாம் நாட்ல எங்கே இருக்குன்னு தேடிகிட்டு தெருத்தெருவா அலைய கூடாது...
Rate this:
Cancel
30-செப்-202118:45:12 IST Report Abuse
ஆரூர் ரங் 7 ஆண்டுகளில் 170 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்து🤔 NEET தீர்வையும் கட்டாயமாக்கி விட்டார். போலி கல்வித்தந்தை கும்பல்👹 கல்லா கட்ட முடியாத ஆத்திரத்தில் துடிப்பது காரணத்தோடுதான் . அவர்களுக்காக துடிப்பது திமுக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X