புதிய தமிழகம் கட்சி வழக்கு தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

புதிய தமிழகம் கட்சி வழக்கு தள்ளுபடி

Added : செப் 30, 2021
Share
சென்னை : உள்ளாட்சி தேர்தலில், புதிய தமிழகம் கட்சிக்கு, 'டிவி' சின்னம் ஒதுக்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.உள்ளாட்சி தேர்தலில், புதிய தமிழகம் கட்சிக்கு, 'டிவி' சின்னம் ஒதுக்கக் கோரி, மாநில தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. மனுவை, மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்து, 17ம் தேதி உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில்,

சென்னை : உள்ளாட்சி தேர்தலில், புதிய தமிழகம் கட்சிக்கு, 'டிவி' சின்னம் ஒதுக்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உள்ளாட்சி தேர்தலில், புதிய தமிழகம் கட்சிக்கு, 'டிவி' சின்னம் ஒதுக்கக் கோரி, மாநில தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. மனுவை, மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்து, 17ம் தேதி உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், புதிய தமிழகம் கட்சி பொதுச் செயலர் வி.கே.அய்யர், மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு, முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மாநில தேர்தல் ஆணையம் சார்பில், வழக்கறிஞர் அனிதா ராமசாமி ஆஜராகி, ''இந்திய தேர்தல் கமிஷன், மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில், பொது சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட, 15 கட்சிகளில், புதிய தமிழகம் இடம் பெறவில்லை,'' என்றார்.இதையடுத்து, மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X