பொது செய்தி

தமிழ்நாடு

புறம்போக்கு வீடு வரன்முறை 2022 ஆக., வரை நீட்டிப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
திருப்பூர் : அரசு புறம்போக்கில் உள்ள வீடுகளை வரன்முறைப்படுத்தும் திட்டம், 2022 ஆக., 30 வரை நீட்டித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழக அரசின் நில நிர்வாகத்துறை, அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை வரன்முறை படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆட்சேபனைக்குரிய ஆக்கிரமிப்பு, ஆட்சேபனையற்ற ஆக்கிரமிப்பு என பிரித்து, அதற்கு ஏற்ப வரன்முறை உத்தரவு

திருப்பூர் : அரசு புறம்போக்கில் உள்ள வீடுகளை வரன்முறைப்படுத்தும் திட்டம், 2022 ஆக., 30 வரை நீட்டித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் நில நிர்வாகத்துறை, அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை வரன்முறை படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆட்சேபனைக்குரிய ஆக்கிரமிப்பு, ஆட்சேபனையற்ற ஆக்கிரமிப்பு என பிரித்து, அதற்கு ஏற்ப வரன்முறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஓடை, நீர்வழி புறம்போக்கு, மயான புறம்போக்கு, வண்டிப்பாதை என ஆட்சேபனைக்குரிய அரசு நிலத்தில், வீடு கட்டி வசிப்பவருக்கு பட்டா வழங்க இயலாது. அதற்கு பதிலாக, அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி குடிபெயர செய்யப்படும்.
ஆட்சேபனையற்ற அரசு நிலமாக இருந்தால், விதிமுறைகளுக்கு உட்பட்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது.தமிழக அரசின் புள்ளிவிவரப்படி, ஒரு லட்சத்து, 77 ஆயிரத்து, 923 ஆட்சேபனைக்குரிய ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் உள்ளன. அவற்றை முறைப்படுத்த வருவாய்த்துறைக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில்,'ஆட்சேபனையற்ற நிலத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசிக்கும் ஏழைக்கு பட்டா வழங்கப்படும். ஆட்சேபனைக்குரிய நிலமாக இருந்தால், குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு நில ஆக்கிரமிப்பை வரன்முறை செய்யும் திட்டம், 2022 ஆக., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X