சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி வேலைக்கு போலி நியமன ஆணை மர்ம கும்பலிடம் ஏமாந்த இளைஞர்கள்

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை : பள்ளி கல்வி துறையில், இளநிலை பணியாளர் வேலை வாங்கி தருவதாக, போலி நியமன ஆணை வழியே, ஒரு கும்பல் ஏமாற்றியுள்ளது. இந்த கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும்படி, அமைச்சர் மகேஷ் கேட்டு கொண்டுள்ளார்.தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும், அரசு தேர்வு துறையில், இளநிலை பணியாளர் பணி உள்ளதாக கூறி, மயிலாப்பூரை சேர்ந்த சிலரிடம், ஒரு கும்பலை சேர்ந்தவர்கள்

சென்னை : பள்ளி கல்வி துறையில், இளநிலை பணியாளர் வேலை வாங்கி தருவதாக, போலி நியமன ஆணை வழியே, ஒரு கும்பல் ஏமாற்றியுள்ளது. இந்த கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும்படி, அமைச்சர் மகேஷ் கேட்டு கொண்டுள்ளார்.

தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும், அரசு தேர்வு துறையில், இளநிலை பணியாளர் பணி உள்ளதாக கூறி, மயிலாப்பூரை சேர்ந்த சிலரிடம், ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் அணுகி உள்ளனர்.அவர்களிடம், ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய் கமிஷன் தர வேண்டும் எனக்கூறி, தலா 50 ஆயிரம் ரூபாய் வரை முன் பணம் பெற்றுள்ளனர். பின், சான்றிதழ்களின் நகல்கள் பெற்று, அவர்களுக்கு போலி நியமன ஆணை வழங்கி உள்ளனர்.
தற்போதைய நிலையில், வீட்டில் இருந்து பணியாற்றினால் போதும்; வங்கி கணக்குக்கு மாதம் தோறும் சம்பளம் வரும் என்றும், அந்த கும்பல் ஆசை வார்த்தை கூறியுள்ளது. இதுகுறித்து, கடந்த 21ம் தேதி பள்ளி கல்வி அலுவலக வளாகத்துக்கு வந்த இளைஞர்களிடம், மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் பணத்தை பெற்று, பணி நியமன போலி ஆணை மற்றும் பணியில் சேர்ந்ததற்கான கையெழுத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.இந்த விவகாரம் குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப்பின் மகேஷ் கூறியதாவது:
யாரும் தனி நபர்களை நம்பி ஏமாற வேண்டும். முறையான சட்டப்பூர்வ வழியில் வேலையில் சேர வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்கள், தைரியமாக முன் வந்து, பள்ளி கல்வி துறையிலும், போலீசிலும் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X