ராமாயண யாத்திரை சிறப்பு ரயில்: முன்பதிவு துவக்கம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
திருச்சி : மதுரையில் இருந்து, 'ராமாயண யாத்திரை,' சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.,) சார்பில், பல்வேறு சிறப்பு ரயில் பயணத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன்படி, நவம்பர் 11ம் தேதி, மதுரையில் இருந்து, 'ராமாயண யாத்திரை சிறப்பு ரயில்,' இயக்கப்படுகிறது. திண்டுக்கல், திருச்சி,

திருச்சி : மதுரையில் இருந்து, 'ராமாயண யாத்திரை,' சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.,) சார்பில், பல்வேறு சிறப்பு ரயில் பயணத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன்படி, நவம்பர் 11ம் தேதி, மதுரையில் இருந்து, 'ராமாயண யாத்திரை சிறப்பு ரயில்,' இயக்கப்படுகிறது. திண்டுக்கல், திருச்சி, சென்னை எழும்பூர் வழியாக செல்லும் இந்த ரயிலுக்கு, ரயில் நிலையங்கள் மற்றும் ஏஜென்டுகள் மூலமும் முன்பதிவு செய்யப்படுகிறது.

காசி, கயா, சீதாமார்ஹி, ஜனக்புரியில் உள்ள சீதா ஜென்ம பூமி, அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமி, நந்திகிராம், சிருங்க வெற்பூர், பிரயாக்ராஜ் போன்ற புகழ் பெற்ற இடங்களுக்கு இந்த சுற்றுலா ரயில் செல்கிறது. உணவு, தங்கும் இடம் வசதி போன்றவற்றுடன், 14 நாட்களுக்கு, 14,490 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசின் கொரோனா சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளுடன், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டும் இந்த சிறப்பு ரயிலில் பயணம் செய்யலாம், என்று இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X