பொது செய்தி

இந்தியா

வவ்வால் உடலில் நிபா வைரசை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
திருவனந்தபுரம்: 'நிபா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அந்த வைரசைப் பரப்பும் வவ்வால்களிடமே இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது' என, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.கேரளாவில் இதுவரை கோவிட் வைரஸ் தாக்கம் குறையவில்லை. இந்தியாவில் பதிவாகும் தினசரி கோவிட் பாதிப்பில் 50 சதவீதம் கேரளாவில் பதிவாகிறது. இந்நிலையில் அங்கு நிபா வைரசும் பரவத்

திருவனந்தபுரம்: 'நிபா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அந்த வைரசைப் பரப்பும் வவ்வால்களிடமே இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது' என, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.



latest tamil news




கேரளாவில் இதுவரை கோவிட் வைரஸ் தாக்கம் குறையவில்லை. இந்தியாவில் பதிவாகும் தினசரி கோவிட் பாதிப்பில் 50 சதவீதம் கேரளாவில் பதிவாகிறது.
இந்நிலையில் அங்கு நிபா வைரசும் பரவத் துவங்கியது. கடந்த 5ம் தேதி 12 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதித்து உயிரிழந்தான்.

இதுகுறித்து கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்து உள்ளதாவது:


latest tamil news



கேரள அரசு மேற்கொண்ட ஆய்வில், ரம்புட்டான் பழங்களில் வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பரவியது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐ.சி.எம்.ஆர்., அப்பகுதியில் சில வவ்வால்களின் உடலில் இருந்து மாதிரிகளை சேகரித்துச் சென்றது. அந்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்துக்கும் அனுப்பப்பட்டன.

ஆய்வு முடிவில், நிபா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபாடி), நிபாவைப் பரப்பும் வவ்வால்களின் உடலிலேயே இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஐ.சி.எம்.ஆர்., மேலும் சில ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-செப்-202118:55:19 IST Report Abuse
அப்புசாமி ... சீனாவுலே வவ்வாலிலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவுச்சுன்னு உலகமே நம்புது. நிபா வைரசுக்கு வவ்வால் சூப் வெச்சு குடிச்சு கொரொனா பரவிடப் போகுது.
Rate this:
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
30-செப்-202117:40:19 IST Report Abuse
Mayavan Mayavan இனி அதையும் விட்டு வைக்க மாட்டாங்க. அதையும் தின்னு துலைத்து மக்கள் வரி பணத்தை நாசம் செய்து மோடி ஒழிக என்று கூச்சல் போடுவார்கள்.
Rate this:
Cancel
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
30-செப்-202116:38:57 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN கம்யூனிஸ்ட்களுக்கும் வவ்வால்களுக்கும் பொருத்தம் நிறைய உண்டு போல. சைனாவிலும் வவ்வால்களால் தான் கோரோணா வைரஸ் பரவியது என்று சொன்னார்கள். இப்போது கேரள கம்யூனிஸ்ட்களும் வவ்வால்களிலிருந்து தான் நிபா வைரஸ் பரவியது என்று கூறுகிறார்கள். சைனாவைவிட இந்த கேரள கம்யூனிஸ்ட்கள் ஒருபடி மேலே போய் வவ்வால்களிலேயே தடுப்பு மருந்து இருப்பதாக கூறுகிறார்கள். இந்த கம்யூனிஸ்ட்களுக்கும் வவ்வால்களுக்கும் இடையேயான இந்த தொடர்பை யாராவது ஆராய்ந்து பார்த்து சொன்னால் நன்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X