வவ்வால் உடலில் நிபா வைரசை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வவ்வால் உடலில் நிபா வைரசை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (5)
Share
திருவனந்தபுரம்: 'நிபா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அந்த வைரசைப் பரப்பும் வவ்வால்களிடமே இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது' என, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.கேரளாவில் இதுவரை கோவிட் வைரஸ் தாக்கம் குறையவில்லை. இந்தியாவில் பதிவாகும் தினசரி கோவிட் பாதிப்பில் 50 சதவீதம் கேரளாவில் பதிவாகிறது. இந்நிலையில் அங்கு நிபா வைரசும் பரவத்

திருவனந்தபுரம்: 'நிபா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அந்த வைரசைப் பரப்பும் வவ்வால்களிடமே இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது' என, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.



latest tamil news




கேரளாவில் இதுவரை கோவிட் வைரஸ் தாக்கம் குறையவில்லை. இந்தியாவில் பதிவாகும் தினசரி கோவிட் பாதிப்பில் 50 சதவீதம் கேரளாவில் பதிவாகிறது.
இந்நிலையில் அங்கு நிபா வைரசும் பரவத் துவங்கியது. கடந்த 5ம் தேதி 12 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதித்து உயிரிழந்தான்.

இதுகுறித்து கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்து உள்ளதாவது:


latest tamil news



கேரள அரசு மேற்கொண்ட ஆய்வில், ரம்புட்டான் பழங்களில் வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பரவியது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐ.சி.எம்.ஆர்., அப்பகுதியில் சில வவ்வால்களின் உடலில் இருந்து மாதிரிகளை சேகரித்துச் சென்றது. அந்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்துக்கும் அனுப்பப்பட்டன.

ஆய்வு முடிவில், நிபா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபாடி), நிபாவைப் பரப்பும் வவ்வால்களின் உடலிலேயே இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஐ.சி.எம்.ஆர்., மேலும் சில ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X