பொது செய்தி

தமிழ்நாடு

'ஹாஸ்டலை எப்ப சார் திறப்பீங்க...?'

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் கல்லுாரிகள் அனைத்தும் செப்., 1 முதல் திறக்கப்பட்ட நிலையில், அதோடு இணைந்துள்ள மாணவ, மாணவியருக்கான விடுதிகளைத் திறக்கச் சொல்லி, பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.இது தொடர்பாக, சென்னை ராணி மேரி கல்லுாரி மாணவியின் தந்தை கூறியதாவது:நாங்கள், ஆந்திர மாநிலத்துக்கு அருகேயுள்ள ஊரில் வசிக்கிறோம். புத்துார் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, 23 கி.மீ.,


சென்னை : தமிழகத்தில் கல்லுாரிகள் அனைத்தும் செப்., 1 முதல் திறக்கப்பட்ட நிலையில், அதோடு இணைந்துள்ள மாணவ, மாணவியருக்கான விடுதிகளைத் திறக்கச் சொல்லி, பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை ராணி மேரி கல்லுாரி மாணவியின் தந்தை கூறியதாவது:
நாங்கள், ஆந்திர மாநிலத்துக்கு அருகேயுள்ள ஊரில் வசிக்கிறோம். புத்துார் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, 23 கி.மீ., துாரத்தில், எங்கள் ஊர் உள்ளது.தினமும் அதிகாலை, 2:00 மணிக்கு எழுந்து குளித்து விட்டு, வீட்டை விட்டு கிளம்பும் என் மகள், 4:00 மணிக்கு, சென்னை ரயிலைப் பிடிப்பார். 7:30 மணிக்கு அந்த ரயில், சென்னை, எழும்பூர் ஸ்டேஷனுக்கு செல்லும். காலை, 8:00 மணிக்கு கல்லுாரி துவங்கும். கல்லூரி முடிந்து, ஒவ்வொரு நாளும் இரவு, 8:00 மணிக்குத் தான் வீடு வந்து சேருகிறார். உண்மையில், அவரது அன்றாடப் பயணத்தைக் கண்டு, எனக்கு ரத்தக் கண்ணீர் வருகிறது.

கொரோனாவுக்கு முன்பு இப்படி இருந்ததில்லை. ராணி மேரி கல்லுாரி விடுதியில், 150 மாணவியர் தங்குவதற்கு வசதி இருந்தது. அதில் தான் என் மகள் இருந்தார்.ஆண்டுதோறும், 'ஹாஸ்டல்' கட்டணமாக, 8,033 ரூபாய் செலுத்தினால் போதும். மாதம்தோறும் உணவுக்கு மட்டும், 1,800 - 2,000 ரூபாய் வரை செலுத்த வேண்டும்.வாரக் கடைசியில் மட்டும், என் மகள் வீட்டுக்கு வந்து செல்வார். படிப்பதற்கும் நேரம் இருந்தது. இப்போது, எதுவுமே செய்ய முடிவதில்லை.தற்போது கல்லுாரிகளைத் திறந்து விட்டனரே அன்றி, விடுதிகளைத் திறக்கவில்லை.
ராணி மேரி கல்லுாரியைப் போன்றே, காயிதே மில்லத் கல்லுாரி, பாரதி மகளிர் கல்லுாரி, பச்சையப்பன் கல்லுாரி விடுதிகளையும் இன்னும் திறக்கவில்லை. இதில் ஒவ்வொன்றிலும் ஏராளமாக புறநகர், வெளி மாவட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.ஒவ்வொரு நாளும், ஆந்திர மாநில எல்லையில் இருந்து, சென்னை வந்து செல்வது என்பது, மிகப்பெரிய துன்பமாக இருக்கிறது. ஸ்டாலின் அரசு மனது வைத்து, கல்லுாரி விடுதிகளைத் திறந்தால் தான் இதற்குத் தீர்வு ஏற்படும்

இவ்வாறு, அவர் கூறினார்.

இது தொடர்பாக, காயிதே மில்லத் அரசு கல்லுாரி தரப்பில் பேசியபோது,
'எங்கள் கல்லுாரி விடுதியை, மறுசீரமைப்பு செய்து வருகிறோம். இந்த ஆண்டு விடுதி வசதி கிடைக்காது என்பதை, மாணவர்கள் விண்ணப்பிக்கும்போதே, தெளிவாகச் சொல்லிவிட்டோம்' என்றனர்.

திறக்காதது ஏன்?

இதுகுறித்து, கல்லுாரி கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'பல கல்லுாரிகளிலும், விடுதிகளிலும் இன்னும் கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்கள் செயல்படுகின்றன. இது தவிர, விடுதிகளை முழுமையாக கிருமி நீக்கம் செய்யும் பணிகளும் நடக்கின்றன. அனைத்து பணிகளும் முடிந்த இடங்களில், படிப்படியாக விடுதிகள் திறக்கப்படுகின்றன' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X