பொது செய்தி

தமிழ்நாடு

17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை: ‛‛தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று(செந்.30) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இன்று செப்., 30ம் தேதி: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்கம், புதுச்சேரி, காரைக்கால்
தஞ்சை, திருச்சி, புதுகை, கனமழைக்கு வாய்ப்பு, சென்னை, வானிலை ஆய்வு மையம்,

சென்னை: ‛‛தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று(செந்.30) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.


latest tamil news


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இன்று செப்., 30ம் தேதி: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்கம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடமாவட்டங்களான வேலுார், திருப்பத்துார், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், தர்மபுரி, நாமக்கல், கடலுார், அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.


latest tamil news


நாளை அக்.,1 ம் தேதி: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, டெல்டா(தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்) மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அக்., 2 முதல் 4ம் தேதி வரை: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்கள் (தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி) டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்) மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.


சென்னையை பொறுத்தவரை:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லோசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


latest tamil news



அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு:



பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்)---- 9 செ.மீ.,
பெருங்களூர் (புதுக்கோட்டை)- 8 செ.மீ.,
ஈரோடு -7 செ.மீ.,
திருச்செங்கோடு (நாமக்கல்), மதுக்கூர் (தஞ்சாவூர்) தலா 5 செ.மீ.,
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), சிவகங்கை தலா 4 செ.மீ.,
புள்ளம்பாடி (திருச்சி), முத்துப்பேட்டை (திருவாரூர்), பேராவூரணி (தஞ்சாவூர்) தலா 3 செ.மீ.,
கறம்பக்குடி (புதுக்கோட்டை), சோழவந்தான் (மதுரை), அருப்புக்கோட்டை (விருதுநகர்), சோலையாறு (கோவை), வல்லம், வாடிப்பட்டி (மதுரை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 2 செ.மீ.,


latest tamil news




மீனவர்களுக்கான எச்சரிக்கை:



வங்கக்கடல் பகுதிகள்:


இன்று 30 ம் தேதி: தெற்கு இலங்கை கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அக்.,2 முதல் 4ம் தேதி வரை: குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X