சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய் கைது

Added : செப் 30, 2021
Share
Advertisement
நாகப்பட்டினம் : நாகையில், உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்த தாய் மற்றும் கள்ளக் காதலனை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர்.நாகை அடுத்த மேலவாஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் மனைவி அபர்ணா,24. கார்த்திக் சென்னை சோழிங்கநல்லுாரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.அபர்ணா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து 4 வயது மகனுடன் நாகையில்

நாகப்பட்டினம் : நாகையில், உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்த தாய் மற்றும் கள்ளக் காதலனை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர்.

நாகை அடுத்த மேலவாஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் மனைவி அபர்ணா,24. கார்த்திக் சென்னை சோழிங்கநல்லுாரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.அபர்ணா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து 4 வயது மகனுடன் நாகையில் தாய் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, ஆட்டோ டிரைவர் சுரேஷ்,34 என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இருவரும் நாகை, சூரியா நகரில் குடும்பமாக வசித்து வந்தனர்.ஜூலை 28 ம் தேதி இரவு உல்லாசமாக இருந்த போது இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்து விட்டு இயற்கை மரணம் போல் நாடகமாடினர். தகவலறிந்த கார்த்திக் தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக, போலீசாரிடம் புகார் அளித்தார்.வெளிப்பாளையம் போலீசார் சிறுவனின் சடலத்தை கைப் பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடர்ந்து, அபர்ணா மற்றும் சுரேஷிடம் நடத்திய விசாரணையில், உல்லாசத்துக்கு குழந்தை இடையூறாக இருந்ததால்துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.அபர்ணா, சுரேஷ் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குழந்தையை கொலை செய்த கள்ளக் காதலர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., ஜவஹர், கலெக்டர் அருண் தம்புராஜிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அபர்ணா, சுரேஷ் ஆகிய இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X