பொது செய்தி

இந்தியா

மம்தா போட்டியிடும் பவானிப்பூர் இடைத்தேர்தலில் குறைவான ஓட்டுப்பதிவு

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எம்.எல்.ஏ., ஆக வேண்டிய கட்டாயத்தில் அவர் போட்டியிடும் பவானிப்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது.அங்கு நண்பகல் 11:00 மணி நிலவரப்படி 21.73 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.கடந்த ஏப்ரல் மாதம் மேற்குவங்க சட்டசபைக்கு நடந்த தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது.
பவானிப்பூர், மேற்குவங்கம், மம்தா, இடைத்தேர்தல்

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எம்.எல்.ஏ., ஆக வேண்டிய கட்டாயத்தில் அவர் போட்டியிடும் பவானிப்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது.

அங்கு நண்பகல் 11:00 மணி நிலவரப்படி 21.73 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.கடந்த ஏப்ரல் மாதம் மேற்குவங்க சட்டசபைக்கு நடந்த தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. அக்கட்சி ஆட்சியை தக்க வைத்த போதிலும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பா.ஜ., வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். எனினும் அவர் முதல்வராக பதவி ஏற்றார். இதனால், அடுத்த மாதங்களில் அவர் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், மம்தா போட்டியிடுவதற்காக பவானிபூர் தொகுதி திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சோபன்தேப் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

காலியான அந்த தொகுதிக்கு இன்று காலை 7:00 மணி முதல் இடைத்தேர்தல் நடந்து வருகிறது. இரவு 7:00 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் தற்போது வரை அமைதியாக நடந்து வருகிறது. எந்த அசாம்பாவித சம்பவங்களும் நடந்ததாக தகவல் வெளியாகவில்லை. பிற்பகல் 3 மணி நிலவரப்படி பவானிப்பூர் தொகுதியில் 48.08 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.


latest tamil news



மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள மேலும் இரு தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி சாம்செர்கன்ஜ் தொகுதியில் 72.45 சதவீத ஓட்டுகளும், ஜாங்கிபூரில் 68.17 சதவீத ஓட்டுகளும் பதிவாகி உள்ளன. ஆனால், பவானிப்பூர் தொகுதியில் மட்டும் குறைந்தளவு ஓட்டுக்கள் பதிவாகி வருகிறது.


பாஜ., வேட்பாளர் புகார்



மம்தாவை எதிர்த்து பா.ஜ., வேட்பாளர் பிரியங்கா திப்ரிவல் கூறுகையில், திரிணமுல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் தருகின்றனர். ஓட்டுக்கு ரூ.500 கொடுக்கின்றனர். வாக்காளர் ஒருவர் இதனை ஒப்புக்கொண்டுள்ளார். அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்து உள்ளேன். திரிணமுல் எம்.எல்.ஏ., மதன்மித்ரா ஓட்டுச்சாவடியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சில நேரம் இயங்காமல் வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
01-அக்-202101:19:23 IST Report Abuse
Natarajan Ramanathan இந்தியாவின் அரசியல் அமைப்பு படி இந்த தேர்தலிலும் மமதை தோற்றால் பதவியை ராஜினாமா செய்யும். பிறகு திரிணமுல் எம்எல்ஏக்கள் எல்லாம் சேர்ந்து இவளையே தலைவியாக தேர்ந்து எடுப்பார்கள். இவளும் பதவி ஏற்றபின் ஆறு மாதத்தில் வேறு ஒரு தொகுதி MLA ராஜினாமா செய்வான். அங்கு இடைத் தேர்தல் நடக்கும். அதில் இவளே போட்டி இடுவாள். இப்படியே ஐந்து வருடங்களை ஓட்டிவிட முடியும்...
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
30-செப்-202120:17:37 IST Report Abuse
Mohan தோல்வி நிச்சயம்.
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் 130 சதவீதம் ஓட்டுப் பதிவு நடக்க வேண்டிய தொகுதி இது. இவ்வளவு குறைவான ஓட்டு பதிவு என்றால் ஏதோ உள்குத்து நடத்தியிருக்கிறார்கள் என்று அர்த்தம். எப்படியிருந்தாலும் எங்கள் அக்காஜீ வெல்வது உறுதி !!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X