பொது செய்தி

தமிழ்நாடு

அரிவாள், ஆயுதங்கள் தயாரிப்பை கண்காணிக்க டி.ஜி.பி.,சைலேந்திரபாபு உத்தரவு

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை: அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைப்பேசி எண்ணை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் எனவும், ஆயுதங்கள் தயாரிப்பை கண்காணிக்கவும் அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முன்விரோத கொலைச் சம்பவங்களைத்
டிஜிபி, சைலேந்திரபாபு, ஆயுதங்கள், தயாரிப்பு, கண்காணிப்பு, உத்தரவு

சென்னை: அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைப்பேசி எண்ணை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் எனவும், ஆயுதங்கள் தயாரிப்பை கண்காணிக்கவும் அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
முன்விரோத கொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து மாநில அளவில் எடுக்கப்பட்ட ‛ஆப்பரேஷன் டிஸ்ஆர்ம்' என்னும் தேடுதல் வேட்டையில் சுமார் 3,325 கொலைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, கொலைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படும் 1,110 கத்திகள் மற்றும் 7 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பவர்கள், தயாரிக்கும் இடங்களை கண்டறிய வேண்டும். பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைப்பேசி எண், எந்த காரணத்திற்காக வாங்குகிறார் போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.


latest tamil news



விவசாயம், வீட்டு உபயோகம் அல்லாமல் மற்ற காரணங்களுக்காக கத்தி போன்ற ஆயதங்களை அடையாளம் தெரியாதவர்களிடம் விற்பனை செய்யக்கூடாது. கண்காணிப்பு கேமராக்களை கடை மற்றும் பட்டறைகளில் பொருத்தப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டால் காவல்துறை உதவி செய்ய வேண்டும். குற்றவாளிகள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிப்பவர்களுக்கு தக்க வெகுமதி வழங்க வேண்டும். இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
30-செப்-202120:07:12 IST Report Abuse
தமிழ்வேள் புல் செதுக்கும் கத்தி , இறைச்சி துண்டாக்கும் கத்தி , மண்வெட்டி ,கலைக்கொத்தி போன்றவையும் பயங்கர ஆயுதங்கள் ..ஆகவே போலீசுக்கு மாமூல் வரும்படி வரும் ஏரியாக்கள் விரிவாக்கப்பட்டுள்ளன ..கோவில்கள் வீடுகளில் தேங்காய் உடைக்க பயன்படும் கொடுவாள் கூட பயங்கர ஆயுதம் தான் ...நல்ல போலீஸ் ....
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
30-செப்-202119:36:44 IST Report Abuse
 Muruga Vel சிகரெட் மது விற்பனை நடத்தலாம் அதுக்கு போலீஸ் பாதுகாப்பு தரும் ..அருவாள் எல்லா கிராமவாசிகள் வீட்டிலும் பயன் படும் ...
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
30-செப்-202119:22:52 IST Report Abuse
Sivagiri சைனாவிலிருந்து வர்றதை என்ன செய்ய ? . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X