பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களில் மது விற்பனைக்கு தடை

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 9 மாவட்டங்களில், அக்டோபர் 4 முதல் 9ம் தேதி வரையிலும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் அக். 12ம் தேதியும் மதுவிற்பனைக்குத் தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வேலூர், திருப்பத்தூர்,
தமிழகம், ஊரக உள்ளாட்சித் தேர்தல், 9 மாவட்டங்கள், மது விற்பனைக்கு தடை, தேர்தல் ஆணையம், அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 9 மாவட்டங்களில், அக்டோபர் 4 முதல் 9ம் தேதி வரையிலும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் அக். 12ம் தேதியும் மதுவிற்பனைக்குத் தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


latest tamil news


இது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் அக். 6 மற்றும் 9 ஆகிய நாள்களில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. ஏனைய 28 மாவட்டங்களுக்கு உள்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் அக். 9ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.


latest tamil news


எனவே, முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறும் பகுதிகளில் அக். 4 காலை 10 மணி முதல் அக். 6 நள்ளிரவு 12 மணி வரையிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மற்றும் தற்செயல் தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் அக். 7 காலை 10 மணி முதல் 9ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மதுக்கடைகள் இயங்க அனுமதியில்லை.

அதேபோல், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளான அக். 12 அன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கி.மீ., சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுக்கூடம் மற்றும் மதுக்கடைகள் மூடியிருக்க, உரிய ஆணைகள் வெளியிட அரசை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. அதன்படி, மேற்படி நாள்களில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
12-அக்-202119:40:33 IST Report Abuse
Palanisamy T இப்படி அடிக்கடி உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் மதுவினால் ஏற்படும் விபத்துக்கள் ஆபத்துக்கள் சமூக சீர் கேடுகள் குறையும். அந்த அளவிற்கு மதுக் கலாச்சாரம் மோசமான நிலையில் உள்ளது. மது விற்பனையை தடைச் செய்ய முடியாதென்றால் மது விற்பனையை கட்டுப் படுத்த அரசு முன் வரவேண்டும். அரசு வருமானத்தை பெருக்குவதற்கு மற்ற வழிகளை நாடவேண்டும்.
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
30-செப்-202115:52:18 IST Report Abuse
SUBBU பக்கத்து மாநிலங்களிலேயே போய் சரக்கு வாங்கிட்டு வர்றவிங்களுக்கு,பக்கத்து மாவட்டத்துல போய் சரக்கு வாங்க முடியாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X